ஸ்ரீயை மீட்டு எடுப்பதுதான் தங்களுக்கு முதல் வேலை… களத்தில் இறங்கிய முன்னணி தயாரிப்பாளர்…

shri
Shri: தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டு வந்த நடிகர் ஸ்ரீ திடீரென தனிமையில் தொடர்ந்து ஆபாசமான கேப்ஷன்களுடன் வீடியோ வெளியிட்டு வந்தது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் அவரை மீட்க களமிறங்கி இருக்கிறார்.
பொதுவாக சில நடிகர்களுக்கு தான் ஒன்று இரண்டு படங்களில் நடித்து விட்டாலே மிகப்பெரிய புகழ் குவிந்துவிடும். அப்படி ஒரு நடிகராக தான் ஸ்ரீ இருக்கிறார். வழக்கு எண் 18 /9 படத்தில் அவர் நடிப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
விஜய் டிவி கனாக்காணும் காலங்கள் சீரியலில் நடித்தவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க தொடர்ச்சியாக அதி்ல் கவனம் செலுத்தினார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் முதல் திரைப்படமான மாநகரம் படத்திலும் நடித்து அசத்தினார். பெரிய இடத்திற்கு வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
கடந்தாண்டு வெளியான இறுகப்பற்று திரைப்படத்தில் முக்கிய இடத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் திடீரென ஸ்ரீ சமூக வலைத்தளத்தில் நீண்ட முடி வளர்த்துக் கொண்டு கலர் அடித்து பாட்டு பாடி வீடியோ போட்டு வருகிறார். ஆனால் இது பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் ஆபாசமான கேப்ஷன்கள், அரைகுறை உடைகள், அரை நிர்வாணம் என ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். என்னவானது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில் ஸ்ரீ நடித்த இறுகப்பற்று திரைப்படத்திற்கு அவருக்கு இன்னும் சம்பளம் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் தனிமையில் இருந்து போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாகவும் பலர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான எஸ் ஆர் பிரபு, ஸ்ரீயின் உடல்நலம் குறித்து நாங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளோம். நான் உட்பட அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், நீண்ட காலமாக அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம்.

இது குறித்து ஏராளமான யுகங்கள் உருவாகி வருவது மிகவும் தவறானது. ஆனால் தற்போது ஸ்ரீயை தொடர்புகொண்டு அவரை மீண்டும் நல்ல ஆரோக்கியத்திற்குக் கொண்டுவருவதற்கே முன்னுரிமையாக கொடுக்கப்படும். அவரை தொடர்புக்கொள்ள யாராவது எங்களுக்கு உதவ முடிந்தால் மிகவும் நன்றி கூறுவோம்.
உண்மைகள் தெரியாமல் கருத்துகள் வெளியிடுபவர்களுக்கும், என் டைம்லைனில் அவரது பாதிப்பைப் பயன்படுத்திக் கொண்டு சத்தமிடும் ஜந்துகளும் ஷட் அப் எனவும் பதிவிட்டு இருக்கிறார். இவர்தான் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் மூலம் இறுகப்பற்றை தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.