பிரசாந்த் வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்!.. தியாகராஜன் நினைச்சும் தடுக்க முடியலயே!..
தமிழ் சினிமாவில் தன்னுடைய அழகாலும் வசீகரத்தோற்றத்தாலும் அனைவரையும் ஆட்கொண்டிருந்தவர் நடிகர் பிரசாந்த். உண்மையிலேயே இவர் தான் டாப் ஸ்டார் என்று சொல்லுமளவிற்கு 90களை மொத்தமாக தன் வசப்படுத்தியவர்தான் பிரசாந்த். கிட்டத்தட்ட பிரசாந்த், விஜய், அஜித் ஆகிய மூவரும் சமகாலத்து நடிகர்களாக தான் சினிமாவிற்குள் வந்தார்கள்.
90களில் மூவருக்குள்ளும் கடுமையான போட்டி இருந்த போதிலும் பிரசாந்த் தனியாக ஒரு டிராக்கில் பெண்களை மிகவும் கவர்ந்து வந்தார். அவர் நடித்த முதல் திரைப்படம் ‘வைகாசி பொறந்தாச்சு’. இந்த படத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக காவேரி என்ற நடிகை நடித்தார்.
படத்தை இயக்கியவர் ராதாபாரதி. இவர் இயக்கும் முதல் திரைப்படமும் கூட. இந்தப் படத்திற்காக புதுமுக நடிகரை போட்டால் சரியாக இருக்கும் என்று தேடிக் கொண்டிருந்த சமயத்தில் பிரசாந்தை ஒரு இடத்தில் பார்க்க அரும்பு மீசையுடன் பார்க்க அழகாகவும் இருந்திருக்கிறார். விசாரித்ததில் தியாகராஜன் மகன் என்று தெரிந்ததும் சரிதான் சினிமா அனுபவமும் இருக்கும் என்ற எண்ணத்தில் தியாகராஜனை பார்க்க ராதாபாரதி மற்றும் சிலர் போயிருக்கின்றனர்.
முதலில் தியாகராஜன் முடியவே முடியாது என்று சொல்லியிருக்கிறார். மேலும் பிரசாந்த் மருத்துவம் படிக்க லண்டன் போக ஏற்பாடுகள் நடக்கிறது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ராதாபாரதி இந்த ஒரு படம் மட்டும் நடிக்க சொல்லுங்கள் என்று மிகவும் வற்புறுத்த தியாகராஜன் சம்மதித்திருக்கிறார். மேலும் இந்த ஒரு படம் தான் அதன் பின் அவனை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் கட்டளையும் போட்டிருக்கிறார்.
இதையும் படிங்க : ‘வானத்தை போல’ பட இயக்குனருக்கு வந்த சோதனை!.. அடாவடியில் இறங்கிய கும்பல்.. ஹீரோவிடம் தஞ்சம் புகுந்த சம்பவம்..
மேலும் சம்பளம் பற்றி பேசும் போது பெரிய தொகையை பேசியிருக்கிறார் தியாகராஜன். அப்பொழுதாவது சம்பளம் கேட்டு தன் மகனை நடிக்க சொல்ல மாட்டார்கள் என்று. ஆனால் வந்திருந்தவர்கள் அவர் கேட்ட தொகையை விட கூடுதலாகவே தருகிறோம் என்று சொல்லி வழுக்கட்டாயமாக சம்மதிக்க வைத்திருக்கின்றனர். ஆனால் பிரசாந்த் சினிமாவிற்குள் வந்ததில் துளி கூட விருப்பமில்லாமல் தான் இருந்திருக்கிறார் தியாகராஜன்.
அதன் பின் வைகாசி பொறந்தாச்சு படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இருக்க தியாகராஜன் இந்தப் படம் வெற்றியடைய கூடாது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாராம். ஆனால் அவர் எண்ணத்திற்கும் மேலாக யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பதிவு செய்தது வைகாசி பொறந்தாச்சு திரைப்படம். அதன் பின் பிரசாந்தை தேடி நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் வீட்டின் வாசலில் காத்துக் கொண்டிருந்தனராம்.
அதன் பின் தியாகராஜனே சரி பிரசாந்த் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அதன் படியே நடக்கும் என்று நினைத்து தொடர்ந்து பல படங்களில் நடிக்க வைத்திருக்கிறார். டெக்னாலஜி வளர்ச்சி இல்லாத நேரத்தில் கூட சிங்கப்பூர், மலேசியா மக்களின் மானசீக நடிகராக உருவெடுத்தார் பிரசாத்.
ஆனால் விதி அவருடைய திருமணப்பந்தத்தில் விளையாடியது. நன்றாக போய்க் கொண்டிருந்த அவரது சினிமா பயணம் அவரது திருமண உறவாலயே சீர்குலைந்தது. பிரசாந்த் என்னிடம் அதிகமாக வரதட்சனை கேட்கிறார் என்று அவரது முன்னாள் மனைவி கேஸ் போட போலீஸ் கோர்ட் என்று அலைந்து அதிலேயே சில நாள்கள் கழித்தார் பிரசாந்த். அதில் பல வாய்ப்புகள் பறிபோனது . இல்லையென்றால் அந்த நேரத்தில் அவருக்கு இருந்த மவுசுக்கு இன்று வசூல் சக்கரவர்த்திகளாக இருக்கும் விஜய் அஜித் இவர்களை எல்லாம் ஓவர் டேக் பண்ணியிருப்பார் பிரசாந்த். இப்பொழுது மீண்டும் தன் பழைய ஃபார்மிற்கு திரும்பியிருக்கிறார் பிரசாந்த். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆர் செய்த செயலில் வியந்துபோன பாங்காக் அரசு.. அவருக்காக என்ன செய்தது தெரியுமா?…