விஜயகாந்துடன் அதிக படங்களில் நடித்த டாப் 10 நடிகைகள்!.. அசால்ட் பண்ணிய ராதிகா!..

Published on: January 13, 2024
vijayakanth
---Advertisement---

Vijayakanth: திரையுலகை பொறுத்தவரை வெற்றி மட்டுமே பேசும். வெற்றிதான் அடையாளம். அது கிடைக்கும் வரை போரட வேண்டும். இது நடிகர், இயக்குனர் என எல்லோருக்கும் பொருந்தும். சினிமா பின்னணி இருந்து நடிக்க அறிமுகமானாலும் ஒரு நடிகரின் படம் வெற்றியடைந்து ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும்.

அறிமுக நடிகர் என்றால் சொல்லவே தேவையில்லை. விஜயகாந்த் சினிமாவில் நுழைய வாய்ப்பு தேடியபோது அவரை பலரும் நிராகரித்தனர். ‘உனக்கெல்லாம் சினிமாவில் நடிக்கும் ஆசை எதற்கு?’ என நக்கலடித்தனர். ‘ஏற்கனவே ஒரு ரஜினிகாந்த் இருக்கும்போது இப்போது

இதையும் படிங்க: விஜயகாந்த் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய டாப் 15 படங்கள்!.. ரஜினி படத்தை தாண்டிய சின்னக் கவுண்டர்..

ஆனால், அதையெல்லாம் தாண்டித்தான் அவர் வாய்ப்புகளை பெற்றார். சில படங்களில் நடித்த பின்னரும், எஸ்.ஏ.சி இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை எனும் ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட்டாலும் அவருடன் ஜோடி போட்டு நடிக்க அப்போதைய முன்னணி நடிகைகள் தயங்கினார்கள். கருப்பாக இருக்கிறார்.. பெரிய ஹீரோ இல்லை.. ‘இவருடன் நடித்து நம் மார்க்கெட்டும் போய்விட்டால் என்ன செய்வது’ என பலரும் நினைத்தனர்.

ராதிகா
ராதிகா

அதனால்தான் ஸ்ரீதேவி, ராதிகா, அம்பிகா, ராதா, ஸ்ரீபிரியா, நளினி போன்ற நடிகைகளும் விஜயகாந்துடன் நடிக்க முடியாது என சொல்லிவிட்டனர். ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி விஜயகாந்த் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியதும் ஸ்ரீதேவியை தவிர மற்ற நடிகைகள் விஜயகாந்துடன் நடிக்க ஒப்புக்கொண்டனர்.

நான் அப்படி நடிப்பேன்னு யாரும் நம்பல!.. ஒருத்தர தவிர!.. விஜயகாந்த் சொன்னது யாரை தெரியுமா?…

இதில் விஜயகாந்துடன் அதிக படங்களில் நடித்ததில் முதலிடத்தை பிடிப்பவர் ராதிகாதான். மொத்தம் 13 படங்களில் நடித்தார். இரண்டாவது நளினி விஜயகாந்துடன் 13 படங்களில் நடித்திருக்கிறார். மூன்றாவதாக நடிகை அம்பிகா 8 படங்களில் நடித்திருக்கிறார். முறையே ராதா 8 படங்களிலும், ரேகா 6 படங்களிலும், மீனா 5 படங்களிலும், கௌதமி 5 படங்களிலும், குஷ்பு 4 படங்களிலும், ரஞ்சிதா 4 படங்களிலும், பானுப்பிரியா 4 படங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

இதில், பானுப்பிரியா சொந்தமாக படம் எடுக்க நினைத்தபோது அவர் கால்ஷீட் கேட்டது விஜயகாந்திடம்தான். அப்படி அவருக்காக விஜயகாந்த் நடித்து கொடுத்த படம்தான் சிறையில் பூத்த சின்னமலர்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.