பாக்ஸ் ஆபிஸ் ஹிட்: கோடிகளை குவித்த டாப் 10 திரைப்படங்கள்!. தமிழில் கெத்து காட்டிய 2.0...
Top ten highest collection : ஹாலிவுட்டில் சில படங்கள் எப்போதும் பல ஆயிரம் மில்லியனை வசூல் செய்யும். அதற்கு காரணம் உலகமெங்கும் உள்ளவர்கள் ஹாலிவுட் படங்களை பார்ப்பார்கள். ஆனால், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட மொழி படங்களை அந்த மொழி புரிந்தவர்கள் மட்டுமே பார்ப்பார்கள்.
அதனால்தான் தமிழ் படங்கள் தமிழ்நாட்டை தாண்டி அதிக வசூல் செய்வதில்லை. வேறுமொழியில் வசூல் செய்ய வேண்டுமெனில் அந்த மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிட வேண்டும். இது தெலுங்கு, கன்னட மொழி படங்களுக்கும் பொருந்தும். கடந்த 10 வருடங்களாகத்தான் இந்திய திரைப்படங்கள் 1000 கோடி வசூலை அசால்ட்டாக செய்து வருகிறது.
இதையும் படிங்க: அதுதான்டா உன் வேலை!.. ஒரு மட்டு மரியாதையே தெரியல.. ஒத்த ரோசா பொண்ணை நல்லா வளர்த்துருக்கம்மா!..
அதற்கு காரணம் பல மொழிகளிலும் படங்களை டப் செய்து வெளியிடுவதுதான். அதை பேன் இண்டியா படங்கள் என சொல்கிறார்கள். இப்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பெரிய ஸ்டார் நடிகர்கள் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் பேன் இண்டியா படமாகவே உருவாகி வருகிறது. அதற்கு கல்லா கட்டும் வியாபார நோக்கம்தான் காரணம்.
இதில், ஹிந்தி படங்களுக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. இந்நிலையில், இப்போதுவரை வசூலில் டாப் 10 திரைப்படங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.
இதையும் படிங்க: கலைஞர் வசனத்தால் தோல்வி அடைந்த எம்.ஜி.ஆர் படம்… ரூட்டை மாற்றியிய பொன்மன செம்மல்!..
அமீர்கான் நடிப்பில் வெளிவந்த தங்கல் திரைப்படம் உலகம் முழுவதும் 1043 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்,ராணா, அனுஷ்கா நடித்து வெளியான பாகுபலி 2 ரூ.1500 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல், பாகுபலி முதல் பாகம் ரூ.650 கோடியை வசூல் செய்தது.
அதேபோல், பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் ரூ.1250 கோடி வரை வசூல் செய்தது. ராஜமவுலி இயகக்த்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் உலக அளவில் ரூ.1236 கோடியை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. சல்மான்கான் நடிப்பில் வெளிவந்த பஜ்ரங்கி பைஜான் ரூ.918 கோடியையும், ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் 1050 கோடியையும், சமீபத்தில் வெளியான ஜவான் படம் ரூ.1100 கோடியையும் வசூல் செய்தது.
அமீர்கான் நடிப்பில் வெளியான பி.கே படம் ரூ.770 கோடியையும், ரஜினி நடிப்பில் வெளிவந்த 2.0 படம் ரூ.800 கோடியையும் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படமும் ரூ.700 கோடி வசூலை தாண்டியது. இன்னும் சில வருடங்களில் தமிழ் படங்களும் ரூ.1000 கோடி வசூலை தொட்டால் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
இதையும் படிங்க: விஜயகாந்த்தின் அந்த படத்தின் ஆடியோவுக்கே தெருவை விலைக்கு வாங்கிரலாம்! அந்தளவு லாபம் சேர்த்த படம்