Connect with us
movies

Cinema News

எல்லா ஏரியாலயும் நாங்க கில்லி!.. ஆந்திராவில் பல கோடிகளை வசூலித்த டாப் தமிழ் படங்கள்!..

திரையுலகில் ஒரு பழக்கம் உண்டு. ஒரு மொழியில் ஒரு படம் சூப்பர் ஹிட் அடித்தால் அதை அப்படியே மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடுவார்கள். அல்லது அந்த கதையின் உரிமையை வாங்கி மற்ற மொழிகளில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவரை வரைத்து எடுத்து புதிதாக வெளியிடுவார்கள். அதை ரீமேக் என சொல்வார்கள்.

எம்.ஜி.ஆரின் சில படங்களே ரீமேக் ஆகியுள்ளது. அதேபோல், சில ஹிந்தி படங்களின் ரீமேக்கில் சிவாஜியும் நடித்துள்ளார். அமிதாப்பச்சனின் பல படங்களை ரீமேக் செய்து இங்கே ரஜினி நடித்துள்ளார். பில்லா கூட அமிதாப்பச்சன் நடித்த ரீமேக் படம்தான். ரஜினிக்கு பின் அஜித் அதே கதையில், அதே தலைப்பில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: கமல் முதல் படத்திலே தேசிய விருது வாங்க காரணம் யார் தெரியுமா? இப்படி தான் கிடைத்தது இந்த வாய்ப்பு!

80களின் இறுதியில் இதுதான்டா போலீஸ், வைஜெயந்தி ஐபிஎஸ் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் தமிழ்நாட்டில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது. அதேபோல் சிரஞ்சீவி,வெங்கடேஷ் ஆகியோரின் தெலுங்கு படங்களும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

அதேபோல், ரஜினியின் படங்கள் தொடர்ந்து தெலுங்கில் டப் செயப்பட்டு வெளியாகி வருகிறது. மேலும், விஷால், சூர்யா, கார்த்தி, விஜய் ஆண்டனி, ராகவா லாரன்ஸ் ஆகியோரின் படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஆந்திராவில் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. தமிழில் சூப்பர் ஹிட் அடித்த லவ் டுடே படமும் ஆந்திராவில் நல்ல வசூலை பெற்றது.

இதையும் படிங்க: கடந்த 3 வருடங்களாக தியேட்டர்களை வாழ வைத்த 3 நடிகர்கள்.. 3 படங்கள்!…

இந்நிலையில், ஆந்திராவில் வசூலில் சக்கை போடு போட்ட டாப் 10 தமிழ் படங்களை பற்றி தெரிந்துகொள்வோம். இதில், ரஜினியின் 2.0 95 கோடி பெற்று முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தையும் ரஜினியே பிடித்திருக்கிறார். அவரின் எந்திரன் படம் ரூ.65 கோடி வசூல் செய்தது. அடுத்து ஷங்கரின் ‘ஐ’ படம் ரூ.54 கோடி வசூலை அள்ளியது. 4வது இடத்திலும் மீண்டும் ரஜினியே இருக்கிறார்.

அவரின் ஜெயிலர் படம் இதுவரை (6 நாட்களில்) 49 கோடியை வசூல் செய்துள்ளது. 5வது இடத்தில் தனுஷின் வாத்தி படம் ரூ.41 கோடியும், 6வது இடத்தில் கபாலி ரூ.39 கோடியும், 7வது இடத்தில் காஞ்சனா 3 ரூ.36.80 கோடியும், 8வது இடத்தில் காஞ்சனா 2 ரூ.32 கோடியும், 9வது இடத்தில் கமலின் விக்ரம் படம் ரூ.30.80 கோடியும், 10வது இடத்தில் ரஜினியின் சிவாஜி படம் ரூ.30 கோடியும் வசூல் செய்துள்ளது. அதாவது இந்த 10 இடத்தில் ரஜினியின் படங்களே 5 இடத்தை பிடித்துள்ளது.

அதேபோல், விஜய் முதல் முதலாக தெலுங்கில் நடித்த வாரசுடு(வாரிசு) திரைப்படம் அங்கு ரூ.27 கோடி வசூல் செய்தது. அதேபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் தெலுங்கில் ரூ.2.5 கோடி மட்டுமே வசூல் செய்து பிளாப் ஆனது. வாரிசு மற்றும் பிரின்ஸ் இரண்டு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வசூலில் தெறிக்கவிடும் சூப்பர்ஸ்டார்!.. கோடிகளை குவிக்கும் ஜெயிலர்.. 6 நாள் வசூல் இதுதான்!…

google news
Continue Reading

More in Cinema News

To Top