Cinema News
2023-ல் ஹீரோக்களை ஓவர்டேக் செய்த டாப் 3 வில்லன்கள்!.. கெத்து காட்டிய பஹத் பாசில்…
சினிமாவில் ஹீரோவை நல்லவனாக காட்ட வேண்டும் என்றால் ஒரு கதாபாத்திரத்தை வில்லனாக, அதாவது கெட்டவனாக காட்ட வேண்டும். வில்லன் இல்லாத கதையில் ஹீரோ மாஸ் காட்ட முடியாது. அதனால்தான் ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
வில்லன் கதாபாத்திரம் அழுத்தமாக காட்டப்பட்டால்தான் அவனை ஹீரோ எப்படி சமாளிப்பார் என ரசிகர்களுக்குள் எதிர்பார்ப்பு ஏற்படும். வில்லன் மொக்கையாக இருந்தால் ஹீரோ என்ன செய்தாலும் அது வேலைக்கு ஆவாது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படத்தில் கூட இதுதான் நடந்தது.
இதையும் படிங்க: விஜய் படத்துலயே கேமியோவா நடிக்க வரல!.. விஜயகாந்த் மகன் படத்துல நடிப்பாரா விஷால்?..
அந்த காலத்தில் எம்.என்.நம்பியார், எம்.ஆர்.ராதா, அசோகர், பி.எஸ்.வீரப்பா என வில்லன் நடிகர்கள் இருந்தார்கள். அதன்பின் சத்தியராஜ், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் என சில நடிகர்கள் வந்தார்கள். அவர்களுக்கு பின் மும்பை, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து வில்லன் நடிகர்கள் கோலிவுட்டில் களம் இறக்கப்பட்டார்கள்.
அந்தவகையில் 2023ம் வருடம் ஹீரோக்களையே ஓவர்டேக் செய்த டாப் 3 வில்லன் நடிகர்கள் பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம். 3வது இடத்தில் இருப்பவர் பஹத் பாசில். மாமன்னன் படத்தில் இவர் காட்டிய நடிப்பை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். இந்த படத்தில் பஹத்பாசில் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதைப்பார்த்த பலரும் அவர்தான் படத்தின் ஹீரோ என நினைத்தனர்.
2வது ஜெயிலர் படத்தில் ரஜினியிடம் வில்லத்தனம் காட்டிய வினாயகன் இருக்கிறார். மலையாளத்தில் பல படங்களில் கலக்கிய வினாயகன் ஜெயிலரில் வில்லத்தனம் காட்டி அசத்தியிருந்தார். பாட்ஷா ரகுவரனுக்கு பின் வினாயக்கின் வில்லன் வேடம் அதிகம் பேசப்பட்டது.
3வது மார்க் ஆண்டனி படத்தில் வில்லனாக அசத்திய எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார். இந்த படத்தில் விஷால் ஹீரோவா இவர் ஹீரோவா என கணிக்கவே முடியாது. படம் உருவான போது ஹீரோ விஷால்தான் என்றாலும் படம் வெளிவந்தபின் அப்படத்தின் ஹீரோவாக மாறும் அளவுக்கு இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா அதகளம் செய்திருந்தார்.
இதையும் படிங்க: சிவாஜியை பல மணி நேரம் காக்க வைத்த சரோஜா தேவி!. டிராப் ஆன திரைப்படம்!..