மூணுல ஒன்னு… மீண்டும் கடனாளியாகும் மனோஜ்.. கோபிக்கு தெரிந்த உண்மை.. தங்கமயிலுக்கு கொழுப்புதான்!

by Akhilan |
மூணுல ஒன்னு… மீண்டும் கடனாளியாகும் மனோஜ்.. கோபிக்கு தெரிந்த உண்மை.. தங்கமயிலுக்கு கொழுப்புதான்!
X

Vijay Tv: சிறகடிக்க ஆசையில் மனோஜ் விஜயாவுக்கு புடவையை வாங்கி கொடுக்கிறார். ஒரு வாட்சை தனக்கு 51 ஆயிரத்துக்கு வாங்கியதை காட்டுகிறார். அண்ணாமலைக்கு துண்டு வாங்கி கொடுக்கிறார். ரோகிணி ரூமுக்கு வந்து எப்படி காசு வந்ததாக கேட்க கிரெடிட் கார்ட் வந்துச்சு அதில் தான் வாங்கினேன் என்கிறார்.

நான் செஞ்சது தப்பா எனக் கேட்க இல்லை இல்லை இதுவும் முதலீடு தானே என்கிறார். பின்னர் முத்து காரில் வந்தவரிடம் சிட்டி மற்றும் சத்யா காசை கேட்டு பிரச்னை செய்துக்கொண்டு இருக்கின்றனர். அதை வீடியோவாக முத்து எடுத்து போலீஸ் போ இதையும் காட்டுவோம் என மிரட்டுகிறார். உடனே சிட்டி அடங்கி போக முத்து எழுதி வாங்கி அவர்களை பிரச்னையில் இருந்து தப்பிக்க வைக்கிறார்.

இதையும் படிங்க: தங்கம்னு நினைச்சா அது செங்கலாயிருச்சு! தங்காலனை பங்கம் செய்த இயக்குனர்

பாக்கியலட்சுமி தொடரில் ஈஸ்வரி பாக்கியாவிடம் நான் அவன் இன்னும் லைஃபில் செட்டில் ஆகலைனு தான் சொன்னேன். அவன் வீட்டை போவானு நினைக்கலை. ஒன்னா இருப்பானு தான் நினைச்சேன் என்கிறார். நீ அவனுக்கு கால் பண்ணு எனக் கூற அவன் நிறைய கனவோட இருக்கான். ஜெயிச்சிட்டு வருவான் என்கிறார்.

இதை தொடர்ந்து, இனியா அழுதுக்கொண்டு இருக்கும் போது கோபி கால் செய்கிறார். அவரிடம் நடந்த விஷயத்தினை கூறுகிறார். பின்னர் எழிலுக்கு கால் செய்ய அவர் போன் ஸ்விட்ச் ஆஃப் என வருகிறது. அமிர்தாவுக்கு கால் செய்ய முதல் ரிங் எடுக்காமல் போகிறார். அடுத்தமுறை கால் செய்து ஹோட்டலில் இருப்பதை கூறிவிடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ராஜீ மற்றும் கதிர் பேசிக்கொண்டு இருக்க அவரிடம் கோச்சிங் எப்படி போகிறது என்கிறார். ராஜீ சமாளித்துவிடுகிறார். செந்தில் மற்றும் மீனா பேசிக்கொண்டு இருக்க அவங்க என்ன புத்திசாலி மருமகளா? நீங்க உண்மையை சொல்லி இருக்கணும் என்கிறார்.

இதையும் படிங்க: கொட்டுக்காளி விழாவில் மிஷ்கின் வேணும்னே பேசினாரா? எதுக்கு இந்த அலப்பறை?

தங்கமயில் சரவணனிடம் சண்டை போடுகிறார். பின்னர் அம்மாவிடம் வந்து சொல்ல அவர் நீ செஞ்சது சரி என்கிறார். சரவணன் செந்திலுக்கு கால் செய்ய அவர் தங்கமயில் கோவிச்சிக்கிட்ட விஷயத்தினை கூற நீ சும்மா தூங்கு காலையில் அண்ணி சரியாகிடுவாங்க எனக் கூறிவிடுகிறார். பின்னர் தங்கமயில் வந்து பார்க்க சரவணன் தூங்கிக்கொண்டு இருக்கிறார்.

Next Story