மீண்டும் மீனா-முத்து சண்டை.. பாண்டியனின் காமெடி… வீட்டுக்கு வருவாரா எழில்? அடுத்த வாரம் இதான்!..

VijayTv: விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் அடுத்த வாரம் என்ன நடக்க இருக்கிறது என்பதற்கான புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜ் மற்றும் ரோகிணியின் ரகசியங்கள் உடைப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் முத்து மற்றும் மீனா இடையே பிரச்னையை இயக்குனர் கொளுத்திவிட்டு இருக்கிறார். சத்யா பிறந்தநாளை முன்னிட்டு கோயிலில் கூழ் ஊத்த மீனாவுக்கு அழைப்பு வருகிறது.

இதையும் படிங்க: இது நம்ம பில்டிங் இல்லயா?!. 10 வயதில் மகன் கேட்ட கேள்வி!.. ஆடிப்போன விஜயகாந்த்…

பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்தினர் முடிவெடுக்கின்றனர். ஆனால் ஈஸ்வரி எழில் இல்லாமல் எப்படி? நீ அவனை வீட்டுக்கு வரச்சொல்லு என ஈஸ்வரி கூற அவன் ஜெயிச்சிட்டு வருவான் என்கிறார் பாக்கியா.

அவனா எப்படி வருவான்? நீயா தான் கூப்பிடணும் எனக் கூறுகிறார். ஈஸ்வரியே எழிலுக்கு கால் செய்து வீட்டுக்கு அழைக்க அவர் வர முடியாது. நான் வந்தால் உங்களுக்கு ஒருமாதிரி இருக்குமே எனக் கூறிவிடுகிறார். ஈஸ்வரி கடுப்படித்துவிட்டு போனை வைத்து விடுகிறார்.

இதையும் படிங்க: தமிழ் டிரெய்லரில் இருந்ததை இந்தியில் மாற்றியதுக்கு காரணம் இதான்… கோட்டில் இதை கவனிச்சீங்களா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தங்கமயிலுக்கு பேசலையா எனக் கேட்க கோமதி நாங்க ஊருக்கு போனப்போ நீங்க கால் பண்ணீங்களா எனக் கடுப்படிக்கிறார். பழனியிடம் வந்து கோமதிக்கு வீடியோ கால் செய்துக்கொடுக்க சொல்லி விடுகிறார் பாண்டியன். முகத்தினை குளோஸ் அப்பில் வைத்து அவரை பயமுறுத்தி பேசுகிறார். இதை பார்த்தி மீனா கலாய்க்கிறார்.

Related Articles
Next Story
Share it