படமாடா இது?!..செம மொக்க!...இந்த வருடம் ரசிகர்கள் ட்ரோல் செய்த திரைப்படங்கள்....
தமிழ் சினிமாவில் வாரத்தின் வெள்ளிக்கிழமையில் புதுப்படங்கள் வெளிவருவது வழக்கமாக இருக்கிறது. இதில் வெகு சில படங்களே ரசிகர்களை கவர்வதாக அமைந்துள்ளன. சில திரைப்படங்களை பார்க்கும் போதே என்னங்க ஜி இது படம். காசு போச்சே என்ற பீலிங் தான் அதிகரித்து வருகிறது. அப்படி 2022ல் மொக்கை வாங்கிய சில படங்கள் உங்கள் பார்வைக்கு.
பீஸ்ட்:
விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட். இப்படம் வணிக ரீதியாக லாபம் எடுத்தது. இருந்தும் அப்படத்தின் காட்சிகள் இந்திய அளவில் ட்ரோல் கண்டெண்ட்டாக மாறியது. அதிலும், கிளைமேக்ஸ் காட்சியை ஏகத்துக்கும் வறுத்து எடுத்தனர். இதனால் இயக்குனர் நெல்சனும் பெரிதாக விமர்சிக்கப்பட்டார்.
ராதே சியாம்:
ராதா கிருஷ்ண குமார் எழுதி இயக்கிய காதல் படம். ராதே சியாம் படத்தில் பிரபாஸ் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தார். படத்திற்கு செம பில்டப் கொடுக்கப்பட்டது. ஆனால் ரிலீஸில் செம பல்ப் வாங்கியது தான் காமெடி. அதுமட்டுமல்லாமல், ஐயா விட்டுருங்க ரேஞ்சில் கதற தொடங்கினர். பாகுபலி நிலைமையை நினைச்சா தான்?!!
தி லெஜண்ட்:
சரவணன் ஸ்டோர்ஸின் உரிமையாளர் தயாரித்து நடித்த படம் தி லெஜண்ட். இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் பேன் இந்திய படமாக பல மொழிகளில் வெளியிடப்பட்டது. நயனை விட அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு ஊர்வசி ரவுடெலா ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிரபல விளம்பர இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இப்படத்தை இயக்கினர். படமும் வந்தது. ஆனால் ஹீரோ தான் படத்தில் காணவில்லையாம். உணர்ச்சிகளை காட்டாத ரோபோ மாதிரி நடிப்பதாகவும் சிலர் விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாறன்:
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்த படம் மாறன். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்தார். தங்கச்சி சென்டிமெண்டில் வெளியான படத்தினை எப்படி தனுஷ் ஒப்புக்கொண்டார் என்ற சந்தேகம் தான் பலருக்கும். தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக வெளியான இப்படத்தினை பார்த்தால் தலைவலி நிச்சயம் தான்.
வலிமை:
2022ஆம் ஆண்டு முன்னணி நடிகர்கள் எல்லாம் சபதம் செய்துள்ளனர் போல. கமலை தவிர மற்ற அனைவரின் படமும் மொக்கை ரேஞ்சிலே அமைந்தது. அதில் தல அஜித் தவறவில்லை. அம்மா பாசத்தில் உருவான வலிமை படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
இதையும் படிங்க: வலிமை படத்தால் சிக்கலில் தவித்த எச்.வினோத்…! நல்லவேளை மாமு கிரேட் எஸ்கேப்….