கேங்கர்ஸ் ரிலீஸ்!.. அடுத்து வெளியாகும் 7 படங்கள்!. களைகட்டப்போகும் சம்மர் லீவ்!…

by சிவா |   ( Updated:2025-04-24 00:13:33  )
gangers
X

பொதுவாக தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, தமிழ் புத்தாண்டு, வினாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய விடுமுறை நாட்களில் தங்களின் படங்கள் வெளியாக வேண்டும் என எப்படி நடிகர்கள் ஆசைப்படுவார்களோ அதுபோலவே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கும் கோடை விடுமுறையிலும் பல முக்கிய பெரிய படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் ஆசைப்படுவார்கள். ஏனெனில், பள்ளிகள் விடுமுறை என்பதால் குடும்பத்துடன் தியேட்டருக்கு வருவார்கள். அதனால், படம் வசூலை அள்ளிவிடும் என கணக்கு போடுவார்கள்.

2025ம் வருடத்தை பொறுத்தவரை சுந்தர்.சி.-வடிவேலு இணைந்து நடித்த கேங்கர்ஸ் திரைப்படம் கோடைகால விடுமுறையை துவக்கி வைத்திருக்கிறது. ஏப்ரல் 24ம் தேதியாய இன்று இப்படம் வெளியாகியுள்ளது. சுந்தர்.சி படம் என்றால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அதை கேங்கர்ஸ் படமும் நிரூபித்திருக்கிறது. இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

அடுத்து மிர்ச்சி சிவா மற்றும் ஜப்பான் மல்யுத்த வீரர் யோசினோரி டோஷினோ முக்கிய வேடத்தில் நடித்துள்ள சுமோ திரைப்படம் ஏப்ரல் 25ம் தேதியான நாளை வெளியாகவுள்ளது. எஸ்.பி.ஹோசிமின் இயக்கியுள்ள இந்த படத்தில் மனோபாலா, யோகிபாபு, பிரியா ஆனந்த், விடிவி கணேஷ் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் மூன்று வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டு சில பிரச்சனைகளால் ரிலீஸாகாமல் இருந்தது. இப்போது பிரச்சனை தீர்க்கப்பட்டு படம் நாளை வெளியாகிறது.

அடுத்து கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ரெட்ரோ படம் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே மே 1ம் தேதியில் சசிக்குமார் - சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி என்கிற படமும் வெளியாகிறது.

அடுத்து மே 16ம் தேதி சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள மாமன் மற்றும் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் வெளியாகிறது. சந்தானத்திற்கு இப்படம் ஹிட் படமாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது. அடுத்து மே 23ம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள ஏஸ்(Ace) படம் வெளியாகிறது.

இறுதியாக ஜூன் 5ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு இணைந்து நடித்துள்ள தக் லைப் திரைப்படம் வெளியாகவுள்ளது. 35 வருடங்களுக்கு பின்னர் கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Next Story