Connect with us
banner

’விக்ரம்’ படத்துல அத கொடுத்து அப்செட் பண்ணிட்டாங்க…! பிரபல நடிகையின் மனக்குமுறல்..!

kamal_main_cine

Cinema News

’விக்ரம்’ படத்துல அத கொடுத்து அப்செட் பண்ணிட்டாங்க…! பிரபல நடிகையின் மனக்குமுறல்..!

கமல் நடிப்பில் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் மாஸாக வந்து கெத்து காட்டி வருகிறார் விக்ரம் படத்தின் மூலம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உட்பட பலரும் நடித்திருக்கும் இப்படம் வரும் 3ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kamal1_cine

இந்த நிலையில் விக்ரம் படத்தை பற்றி பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வர 1986ல் விக்ரம் படத்தில் நடித்த நடிகையும் கமலுக்கு ஜோடியாகவும் நடித்த நடிகை லிசி தனது அந்த கால விக்ரம் படத்தின் அனுபவத்தை பகிர்ந்தார். மேலும் சமீபத்தில் உள்ள விக்ரம் படத்தை பற்றி ஏற்கெனவே கமல் என்னிடம் பேசினார்.

kamal2_cine

நானும் இந்த படத்தில் நடிக்க கூப்பிடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை. மேலும் அவர் கூறுகையில் “ நான் விக்ரம் படத்தில் நடிக்கும் போது நான் மிகவும் குட்டிப் பொண்ணாக ஒல்லியாகவும் இருப்பேன். ஆனால் அந்த படத்தில் எனக்கு ஒரு மென்பொறியாளர் மாதிரியான கதாபாத்திரம் என்பதால் பார்ப்பதற்கு இன்டலெக்சுவல் லுக் மாதிரி வேண்டும் என்பதற்காக என்னிடம் ஒரு பெரிய கண்ணாடியை கொடுத்து விட்டார்கள்.

kamal3_cine

படம் முழுக்க அந்த கண்ணாடியை அணிந்தவாறே தோன்றியிருப்பேன். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. முதலில் இவர்கள் செய்வதை பார்க்கும் போது அப்செட் ஆகி விட்டேன். பின் அதுவே பழகி விட்டது . ஆனால் அதெல்லாம் நினைச்சா இப்ப சிரிப்புத்தான் வருது” என கூறினார். மேலும் இந்த படத்தில் இல்லைனாலும் விக்ரம் 3படத்திலாவது நான் நடிப்பேன் என்றும் கூறினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top