ரெட்ரோ பட வசூல்ல வெறும் 10 பர்சண்ட்தானா!.. கல்லா கட்டுமா டூரிஸ்ட் ஃபேமிலி?!….

சூர்யாவின் ரெட்ரோ படம் மே 1ம் தேதியான நேற்று வெளியான நிலையில் ஒருபக்கம் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ள டூரிஸ்ட் பேமிலி படமும் நேற்று வெளியானது. நல்லதொரு ஃபீல் குட் மூவியாக வெளியாகியுள்ள இப்படத்தில் சசிக்குமார், சிம்ரன், யோகிபாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
அயோத்திக்கு பின் மீண்டும் ஒரு குடும்ப திரைப்படத்தில் சசிக்குமார் நடித்திருக்கிறார். இலங்கையில் பொருளாதார பிரச்சனையில் சிக்கிய ஒரு குடும்பம் படகு வழியாக இராமேஸ்வரம் வருகிறது. அவர்கள் சென்னையில் வந்து வசிக்க யோகிபாபு உதவுகிறார். மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் சென்னையில் புதிய வாழ்க்கை வாழ முயற்சி செய்கிறார் சசிக்குமார்.
சட்டத்தை மீறியும் போலீசாருக்கு தெரியாமலும் அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ முயற்சி செய்ய அவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்பதுதான் படத்தின் கதை. ஒரு சீரியஸான கதையை காமெடி கலந்து சொல்லியிருப்பதுதான் படத்திற்கு பெரிய பிளஸ்.

யோகிபாபு மற்றும் சசிக்குமாரின் இரண்டு மகன்களும் அதை செய்துவிடுகிறார்கள். படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் எமோஷனல் காட்சிகள் அதை தெரியாமல் சரி செய்து விடுகின்றன. படம் பார்த்த எல்லோரும் படம் நன்றாக இருப்பாதாகவே சொல்லி வருகிறார்கள்.
நல்ல படம் பார்க்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக இப்படத்தை பார்ப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஒரு நாளில் இப்படம் தமிழகத்தில் 2 கோடியை வசூல் செய்திருக்கிறது. நேற்று வெளியான ரெட்ரோ படம் 20 கோடியை வசூல் செய்துள்ள நிலையில் அந்த படத்தில் 10 சதவீதத்தை மட்டுமே இப்படம் வசூலித்திருக்கிறது. மிகவும் குறைவான பட்ஜெட்டில் இப்படம் உருவாகியிருப்பதாலும், படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் வருவதாலும் வார இறுதியில் 3 நாட்கள் இருப்பதாலும் இப்படத்திற்கு வசூல் அதிகரிக்கும் என்றே கணிக்கப்படுகிறது.