டூரிஸ்ட் பேமிலி புக்கிங் பாத்தா ரெட்ரோ அவ்ளோதான் போல!.. ஐயோ பாவம் சூர்யா!…

கடந்த 1ம் தேதி சூர்யாவின் ரெட்ரோ படத்தோடு சசிக்குமார் நடித்திருந்த டூரிஸ்ட் பேமிலி படமும் வெளியானது. ரெட்ரோ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே பெரிய ஹிட் படங்கள் அமையவில்லை. ஜெய்பீம், சூரரைப்போற்று படங்கள் ஓடிடியில் வெளியானது. தியேட்டரில் கடைசியாக சிங்கம் 2 படமும் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதற்கு காரணம் இயக்குனர்களை சூர்யா சரியாக நம்புவது இல்லை. அவரை ஏற்றிவிட்ட கவுதம் மேனன், ஹரி, பாலா போன்ற இயக்குனர்களின் படங்களிலேயே அவர் நடிக்க மறுத்தார். எதற்கும் துணிந்தவன் படம் சரியாக போகாத நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்கப்போனார்.

ஆனால், இந்த படமோ சூர்யா ரசிகர்களையே திருப்திப்படுத்தவில்லை. இத்தனைக்கும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்தை நன்றாகவே எடுத்திருந்தார்கள். ஆனால், கதையும், திரைக்கதையும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதோடு, சூர்யாவை பிடிக்காத சிலர் இப்படத்திற்கு எதிராக வன்மத்தை கக்க படம் பிளாப் ஆகிவிட்டது. அதன்பின்னர்தான் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்தார். இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது. இதுவரை இப்படம் 75 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தோடு வெளியான குட் பேட் அக்லி படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. ரெட்ரோவை ஒப்பிட்டால் இப்படம் குறைவான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. எனவே, தியேட்டர்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புக் மை ஷோ இணையதளத்தில் ரெட்ரோ படத்திற்கு 85 ஆயிரம் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டூரிஸ் பேமிலி படத்திற்கு 83 ஆயிரம் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு 9.5 ரேட்டிங் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பார்க்கும்போது தியேட்டர்கள் மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் இப்படம் தமிழகத்தில் தமிழகத்தில் 35 முதல் 40 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. விரைவில் 50 கோடி வசூலை தாண்டி விடும் என்கிறார்கள். இப்படியே போனால் ரெட்ரோ படத்தை விட டூரிஸ்ட் ஃபேமிலி படம் அதிக வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.