பிச்சைக்காரன் படமா? ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் பார்த்து விஜய் ஆண்டனி கருத்து

family
Tourist Family: சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வரும் மே 1 ஆம் தேதி ரிலீஸாக கூடிய திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சமீபகாலமாக சசிகுமார் புதுமுக இயக்குனர்களையே அறிமுகம் செய்து வருகிறார். அயோத்தி திரைப்படம் கூட புதுமுக இயக்குனர்தான். அந்தப் படம் எந்தளவு ரசிகர்களை கவர்ந்தது என அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் ரசிகர்களை கவருமா என்பதை மே 1 ஆம் தேதிதான் பார்க்க இருக்கிறோம்.
இந்தப் படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். இந்தப் படத்தில் மேலும் எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு,கமலேஷ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலைத்தான் இந்தப் படம் பேசப் போகிறது. படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் எம்.ஆர். பி. என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவிண்ட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் மற்றும் பிற திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு படத்தை பற்றி பேசினார்கள். இதில் விஜய் ஆண்டனியும் படத்தை பார்த்து பிரம்மாதமாக பேசினார். முதலில் சசிகுமாருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அவரின் கதை தேர்ந்தெடுக்கும் முறையையும் பற்றி பேசி மகிழ்ந்தார்.
மேலும் படம் பிரம்மாதமாக இருக்கிறது. எனக்கு ஆனந்தமாக எதை பார்த்தாலும் அழுதுவிடுவேன். அப்படித்தான் இந்தப் படமும் எனக்கு இருந்தது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி இன்னொரு பிச்சைக்காரன் மாதிரியே இருந்தது என விஜய் ஆண்டனி கூறினார். இவர் சொன்னதை போல் சசிகுமார் சமீபகாலமாக கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

டூரிஸ்ட் ஃபேமிலி படம் இலங்கையிலிருந்து ஈழ அகதிகளாக இங்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக குடியுரிமை வாங்கிக் கொடுக்கும் படமாக இருக்கும் என்றும் சசிகுமார் தெரிவித்தார். அவர் கிட்டத்தட்ட 11 புதுமுக இயக்குனர்களை தன் படங்களின் மூலம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.