Tourist Family: டிரெய்லரை பார்த்து படம் பார்த்தா மோசம் பண்ணிட்டீங்களே… டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி இருக்கு?

by Akhilan |   ( Updated:2025-04-30 23:12:35  )
Tourist Family: டிரெய்லரை பார்த்து படம் பார்த்தா மோசம் பண்ணிட்டீங்களே… டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி இருக்கு?
X

Tourist Family: அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவுந் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக அங்கிருந்து கடல் வழியாக ராமேஸ்வரம் வருகின்றனர் சசிகுமாரின் குடும்பம்.

இருந்தும் அங்கு ஒரு போலீஸாரிடம் மாட்ட அவரோ மனிதநேயத்தோடு அவர்களை விட்டு விடுகிறார். இவர்களும் சென்னை வந்து ஒரு வீட்டில் குடியேறி சந்தோஷமாக வாழ தொடங்கின்றனர். இந்த நேரத்தில் ராமேஸ்வரத்தில் ஒரு குண்டு வெடிப்பு நடக்கிறது.

அந்த விபத்தை சசிகுமார் குடும்பம் தான் செய்திருக்கும் என அவர்களை போலீஸ் தேட துவங்குகிறது. இப்படி ஒரு ஆபத்தில் இருந்து தன் குடும்பத்தை சசிகுமார் எப்படி காப்பாற்றினார் என்பது தான் மொத்த கதையாக சொல்லப்பட்டு இருக்கிறது.

புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவுந் சசிகுமாரின் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டார். இந்த படத்தின் விழாவில் கூட நான் அறிமுகம் செய்யும் பத்தாவது இயக்குனர் இவர் என அவர் சொல்லி இருந்தார். அதுபோல திரைக்கதையில் பல இடங்களில் முதிர்ச்சி காட்டி இருக்கிறார்.

சற்று கதையில் தடுமாறி இருந்தால் கூட படத்திற்கு அது பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதால் கவனமாகவே கையாண்டு இருக்கிறார். சசிகுமார் எப்போதும் போல ஹீரோவாக மட்டும் இல்லாமல் படத்தின் மொத்த பலமாகவே நடித்து இருக்கிறார்.

தேவையான இடங்களில் சிரிக்க வைத்தும் பல இடத்தில் சிந்திக்க வைப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சிம்ரன் நடிப்பில் நிறைய அனுபவங்கள் தெரிகிறது. அது மட்டுமல்லாமல் படத்தில் சசிகுமாரின் மகன்களாக இருந்த நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த பொறுப்பை உணர்ந்து நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டனை மற்ற மொழிகள் கொண்டாடி தீர்த்த பின்னர் தமிழுக்கு மீண்டும் சரியான நேரத்தில் வந்துள்ளார். பாடல்கள் எல்லாமே தரம். பின்னணி இசை கூட காதுக்கு நோவாமல் படத்தோடு நம்மை ஒன்ற வைத்து இருக்கிறது.

கண்ணுக்கு தெரிந்த சொதப்பலை கூட திரைக்கதை பூசி மொழுகி காப்பாற்றி விடுகிறது. ஆனால் இப்படி ஒரு சீரியஸான கதையை எடுத்து பல இடங்களில் காமெடியாகவே சொல்லி இருக்கிறார் இயக்குனர். கிட்டத்தட்ட டிரெய்லரும் சீரியஸாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story