Connect with us

ஜனநாயகன் Loss.. அதே புரடியூசருக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்த Toxic.. 1000 கோடி கன்பார்ம்!…

latest news

ஜனநாயகன் Loss.. அதே புரடியூசருக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்த Toxic.. 1000 கோடி கன்பார்ம்!…

விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. கடந்த ஜனவரி 9ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் போனதால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன்பின் உச்சநீதிமன்றம் சென்று தற்போது ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் படம் வெளியாகவில்லை. நிலைமையை புரிந்து கொண்ட தயாரிப்பாளர் இந்த படம் தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றார். படம் தற்போது மறுதணிக்கையில் இருக்கிறது. அதேநேரம் படம் எப்போது வெளியாகும் என்பது யாருக்கும் தெரியாமல் இருக்கிறது..

படம் சொன்ன தேதி வெளியாகாததால் படத்தை வாங்கிய சில வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளரிடம் பணத்தை திரும்பி கேட்டதாக தெரிகிறது. மற்ற விநியோகஸ்தர்கள் பேசிய விலையவிட குறைவாக கேட்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஒடிடி நிறுவனமும் பேசியவிலையிலிருந்து குறைத்து சொல்வதாக செய்திகள் கசிந்தது. எப்படி பார்த்தாலும் ஜனநாயகன் படம் சொன்ன தேதியில் வெளியாகாமல் போனதால் இந்த படத்தை தயாரித்துள்ள KVN நிறுவனத்திற்கு பல கோடிகள் நஷ்டம்..

அதேநேரம் இதே KVN நிறுவனம் தயாரித்துள்ள Toxic (டாக்சிக்) திரைப்படம் பல கோடி லாபத்தை கொடுத்திருக்கிறது. இந்த படத்தில் KGF பட புகழ் யாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை கீத்து மோகன்தாஸ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது..

இந்நிலையில்தான் இந்த படம் 1000 கோடி வியாபாரத்தை தொட்டிருக்கிறது அதாவது இந்த படத்தை தியேட்டரில் வெளியிடும் உரிமை மட்டுமே 650 கோடி விலை போய் இருக்கிறது மேலும் ஓவர்சீஸ் என சொல்லப்படும் வெளிநாட்டு உரிமைக்கு 15 கோடி கொடுத்திருக்கிறார்கள். இதுபோக தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் உரிமை, மற்றும் ஆடியோ உரிமை எல்லாம் சேர்த்தால் எப்படியும் இந்த படத்தின் வியாபாரம் கோடியை தொடும் என்கிறார்கள்..

400 கோடி பட்ஜெட்டில் உருவான டாக்ஸிக் திரைப்படத்தின் வியாபாரம் 1000 கோடியை தோட்டிருக்கிறது. படம் வெளியாகி தியேட்டரில் கிடைக்கும் வசூலை சேர்த்தால் கண்டிப்பாக இப்படம் 1500 கோடி வியாபாரத்தை தொடலாம் என்கிறார்கள். டாக்சிக் திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பேன் இண்டியா படமாக வெளியாவது குறிப்பிடத்தக்கது.

To Top