Connect with us

தீவிர சிகிச்சை பிரிவில் டி.ராஜேந்தர்….விரைவில் சிங்கப்பூர்?…அதிர்ச்சியில் திரையுலகம்….

Cinema News

தீவிர சிகிச்சை பிரிவில் டி.ராஜேந்தர்….விரைவில் சிங்கப்பூர்?…அதிர்ச்சியில் திரையுலகம்….

தமிழ் சினிமாவில் உண்மையில் பன்முக திறமையானவர் என்றால் அது டி.ராஜேந்தர் தான் . ஒரே படத்தில் ஹீரோவாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, பாடல்கள், இசை , இயக்கம் என அனைத்தையும் இவர் ஒருவரே கையாண்டு அதில் வெற்றியும் கண்டுவிடுவார்.

தன்னை எவ்வளவு ட்ரோல் செய்தாலும், அதனை கூட பாசிட்டிவாக மாற்ற கூடிய நல்ல மனிதர் டி.ஆர். இதுவரை வந்த தமிழ் நடிகர்களில் கதாநாயகிகளை தொடாமல் நடித்து வந்த நடிகர் டி.ஆர் தான். இவருக்கு எந்த கெட்டபழக்கமும் இருந்ததில்லை என்றே திரையுலகினர் பெருமையாக பேசுவர்.

தமிழ் திரையுலகில் இப்படிப்பட்ட, நல்ல குணங்கள் உள்ள இந்த நல்ல மனிதர் தற்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன் – ப்ளீஸ் சிம்பு எனக்கு வேணும்., சேர்த்து வைங்க.! அவர் வீட்டு முன்பு அட்ரசிட்டி செய்த சீரியல் நடிகை.!

தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்றாலும் கூட, மேல் சிகிச்சைக்காக டி.ஆர்-ஐ சிங்கப்பூர் கூட்டி செல்ல அவரது குடும்பத்தார் தீர்மானித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் விரைவில் நலமுடன் வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் இறைவனை பிரார்த்தித்து வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top