தமிழ் சினிமாவில் பன்முக கலைஞராக வலம் வந்தவர் நடிகரும் இயக்குனருமாக வலம் வருபவர் டி.ராஜேந்அட்ஸாழ்ஃப்ட்4ரெதிரன். அடுக்குமொழி வசனத்திற்கு சொந்தக்காரர். நடிகனாலே அழகு, நிறம், வாட்ட சாட்டமான உடம்பு என்ற நிலையை முற்றிலும் மாற்றியவர் டி.ஆர். தங்கச்சி செண்டிமெண்ட், காதல் செண்டிமெண்ட் என இரண்டிற்கும் முக்கியம் கொடுத்து படங்களை இயக்குவார்.
இவரின் பெரும்பாலான படங்கள் எல்லாமே தங்கச்சி செண்டிமெண்டாகவே இருக்கும். இவர் ஓர் நடிகரும், இயக்குநரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். திமுகவில் தன்னை இணைத்து கொண்டு ஒரு பரப்பு செயலாளராக மாறினார்.
ஒருதலை ராகம் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இவருடைய பாணியே வேற மாதிரியாக இருந்தது. இந்த நிலையில் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார்.
அப்போது திடீரென சித்தர் பாடலை பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார் டி.ஆர். அதுமட்டுமில்லாமல் சினிமா பாடலை மட்டும் பாடுகிறவன் இல்லை நான் என்று கூறியதோடு எல்லா விதமான பாடல்களையும் பாடுவேன் என்றும் கூறினார்.
மேலும் சித்தர்களை வணங்கும் நான் சித்தர்களின் பாடல்களையும் பாடுவேன் என்று கூறியதோடு இத்தனை பாடல்களையும் பாடும் நான் மேடைக் கச்சேரிகளில் மட்டும் பாடமாட்டேன், இதுவரை நான் அப்படி பாடியதே இல்லை என்றும் கூறினார். மேலும் ஒரு கோடி கொடுத்தாலும் மேடை கச்சேரியில் மட்டும் பாடமாட்டேன் என்றும் அப்படி பாடினால் என்னுடைய திறமையை பாராட்ட தெரியாது என்றும் கூறினார்.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…