ஒரே நடனத்தில் தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகை....இப்போ யாரும் இப்படி ஆட முடியுமா?

by sankaran v |
ஒரே நடனத்தில் தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகை....இப்போ யாரும் இப்படி ஆட முடியுமா?
X

TR Rajakumari

தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் ராஜாயி என்றால் யார் என திருதிருவென முழிப்பார்கள். அதே நேரம் டி.ஆர்.ராஜகுமாரி என்றால் டக்கென்று நமது கால சக்கரம் சுழலும். 1960களில் கொண்டு போய்விடும்.

அப்போது தமிழ்சினிமாவின் முன்னணி நடிகை இவர் தான். நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்திலும் தேர்ந்தவர். பாடல்கள் பாடுவதிலும் இவருக்கு நிகர் இவரே. இவரைப் பற்றி சுருங்கப் பார்ப்போம்.

5.5.1922ல் பிறந்தார் இந்த பைங்கிளி. இவரது இயற்பெயர் ராஜாயி. இவரது பெற்றோர் ராதாகிருஷ்ணன் - ரெங்கநாயகி. ராஜகுமாரி திருமணம் செய்யாமலேயே கடைசி வரை இருந்து விட்டார்.

எம்.கே.தியாகராஜபாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.கே.ராதா, டி.ஆர்.மகாலிங்கம் என பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவரது முதல்படம் 1939ல் வெளியான குமார குலோத்துங்கன்.

drums dance in TR. Rajakumari

இவரது நடிப்பில் சக்கை போடு போட்ட படங்கள் ஏராளமாக உண்டு. பட்டி தொட்டிகளில் போய் கேட்டால் இன்றும் சிலாகித்து சொல்வார்கள் நம் பாட்டிமார்கள். அந்த காலத்துல டி.ஆர்.ராஜகுமாரி மாதிரி இப்போ நடிக்க யார் இருக்கான்னு கேட்பாங்க. அப்படிப்பட்ட அழகு, அபிநயம், கண் அசைவு, தெளிவான உச்சரிப்பு, அழகு தமிழ், நடனம் என இவரை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

எம்.கே.தியாகராஜபாகவதருடன் இவர் இணைந்து நடித்த சிவகவி மற்றும் ஹரிதாஸ் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. அதே போல பி.யு.சின்னப்பாவுடன் இணைந்து நடித்த மனோன்மணியும், ஜெமினி பிலிம்ஸின் சந்திரலேகா படமும் இவரது நடிப்பில் தனி முத்திரை பதித்தவை. அமரகவி, பவளக்கொடி, வனசுந்தரி ஆகிய படங்கள் சூப்பர்ஹிட் ரகங்கள்.

TR.Rajakumari

சந்திரலேகாவின் கிளைமாக்ஸ் காட்சியில் இவர் ஆடும் பிரம்மாண்டமான டிரம்ஸ் நடனம் தேசிய அளவிலான பாராட்டைப் பெற்றது.

கலைஞர் மு.கருணாநிதியின் வசனத்தில் உருவான சிவாஜி நடித்த மனோகரா படத்தில் இவர் வசந்தசேனையாக வந்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.

சிவாஜியுடன் தங்கப்பதுமை, எம்ஜிஆருடன் பெரிய இடத்துப் பெண், பணக்காரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 1963 வரை நடித்த இவர் தனது 77வது வயதில் காலமானார்.

Next Story