Cinema History
சிவாஜியால் எம்ஜிஆருக்கு கிடைத்த பெரிய வெற்றி! ‘கூண்டுக்கிளி’க்கு பின் நடந்த அதிசயம்
Sivaji MGR: தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் மாபெரும் ஆளுமைகளாக இருந்த இரு நடிகர்கள் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் என சிவாஜியும் மக்கள் திலகம் என எம்ஜிஆரும் மக்கள் மத்தியில் ஜொலித்து வந்தார்கள். சிவாஜியின் பலமே அவர் பேசிய வசனங்கள் தான். பராசக்தி தொடங்கி மனோகரா, கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற எண்ணற்ற திரைப்படங்களின் மூலம் பல உரையாடல்களை தன்னுடைய கணீர் குரலால் பேசி உலகம் முழுவதிலும் இருந்த தமிழர்களின் மனதில் இன்றுவரை வாழ்ந்து வருகிறார் சிவாஜி.
அதே வேளையில் மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை தன் படங்களின் மூலம் சொல்லி ஒவ்வொருவரும் எப்படி இருக்க வேண்டும் என தன் நடிப்பால் புரிய வைத்தவர் எம்ஜிஆர். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படமாக கூண்டுக்கிளி திரைப்படம் அமைந்தது. ஆனால் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற வில்லை. டி ஆர் ராமண்ணா எடுத்த முதல் படம் தோல்வியை தழுவியதால் அந்த நேரத்தில் எம்ஜிஆரும் சிவாஜியும் பெரும் உச்சத்தில் இருந்தார்கள்.
இதையும் படிங்க: சீக்கிரம் டெலிவரி ஆகிடும் போலத் தெரியுதே!.. அமலா பால் வயிறு எப்படி பெருசாகிடுச்சு பாருங்க!..
அதனால் அவர்களை வைத்து ஒரு படத்தை தயாரித்தால் கண்டிப்பாக ஹிட் ஆகும் என எண்ணி கூண்டுகிளி படத்தை எடுத்தார். அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் டிஆர் ராமண்ணாவின் சகோதரியும் நடிகையுமான டி ஆர் ராஜகுமாரி. ராஜகுமாரி மீது சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் ஒரு அளவு கடந்த மரியாதை எப்பொழுதுமே இருந்ததாம்.
அதனால் ராஜகுமாரி கேட்டுக் கொண்டதற்கு இணங்க இருவரும் அந்த படத்தில் சேர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டனர். ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது. அதற்கு காரணம் பொழுதுபோக்கு அம்சங்கள் அந்த படத்தில் இல்லை என்பதுதான். கூண்டுக்கிளி திரைப்படம் வெளியான அதே வருடம் அதே நாளில் சிவாஜியின் தூக்கு தூக்கி என்ற திரைப்படமும் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க : ஹிப் ஹாப் ஆதி படம் ஹிட்டா?.. ஃபிளாப்பா?..PT சார் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?..
அந்தப் படத்தை டி ஆர் ராமண்ணா போய் பார்க்க அதில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பதை அறிந்தார். அதனால் நம்முடைய ட்ரெண்டை மாற்ற வேண்டும் என நினைத்து அதே மாதிரியான ஒரு பொழுதுபோக்கு அம்சம் உள்ள படத்தை எம்ஜிஆரை வைத்து எடுத்தார் ராமண்ணா, அந்த படம் தான் குலேபகவாலி. அந்தப் படம் எப்பேர்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரியும்.