சினிமாவால் மொட்டை ராஜேந்திரன் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவம் - விரக்தியின் உச்சத்திற்கே சென்ற பரிதாபம்!!
நடிகர் மொட்டை ராஜேந்திரன் பல படங்களில் எடுபுடி கதாப்பாத்திரத்திலும், அடியாள் உள்ளிட்ட சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்து பிறகு நான் கடவுள் படத்தின் மூலம் பிரபலமானவர். அடுத்தடுத்து பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, டார்லிங் உள்ளிட்ட படங்களில் காமெடி ரோல்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.
பார்க்கும் போதெல்லாம் சிரித்த முகமாக, வெள்ளந்தியாக இருக்கும் இவரின் நிஜ வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத பல துயர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகர் மொட்டை ராஜேந்திரனின் தாத்தா, தந்தை இருவருமே சினிமா ஸ்டண்ட் நடிகர்களாக இருந்துள்ளனர். ஆனால் இவருக்கு சிறு வயதில் இருந்தே சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
ஆனால் தான் கருப்பாக இருப்பதாலும், தன்னுடைய குரல் சற்று கரகரப்பாக வித்தியாசமாக இருப்பதாலும் சிறு வயதில் இருந்தே கேலி,கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளார் மொட்டை ராஜேந்திரன். எனினும் சில முறை ஹீரோவாக முயற்சித்துள்ளார். ஆனால் அங்கேயும், பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இவரை கேலி செய்து, உன் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா என்றெல்லாம் கேட்டு காயப்படுத்திவிட்டனர். இதனையடுத்து இவரும் ஸ்டண்ட் கலைஞராக சினிமாவில் வலம் வந்துள்ளார்.
பல ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு 58 வயதில் தான் நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்தார் ராஜேந்திரன். அதன் , பிறகு பாஸ் என்கிற பாஸ்கரன், வருத்தப்பாத வாலிபர் சங்கம் என பல காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார். சிறு வயதில் அடர்த்தியான முடியுடன் இருந்த இவர் தற்றோது தலைமுடி, மீசை, தாடி, புருவம் எதுவுமே இல்லாமல் மொட்டை ராஜேந்திரனான கதையை பற்றி பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவத்துள்ளார்.
ஒரு மலையாள பட இயக்குநர் சண்டை காட்சிக்காக இவரை ஒரு ஆற்றில் குதிக்க சொல்லியிருக்கிறார். அந்த ஆற்றில் ஏதோ கெமிக்கல் கலக்கப்பட்டதால், விஷமாக மாறிவிட்டது என்பதை அவரிடம் மறைத்துவிட்டனர். சண்டைக் காட்சிக்காக அந்த ஆற்றில் இரண்டு முறை குதித்துள்ளார். இரண்டாவது முறை குதித்து மேலே எழுந்த போது, பாதி முடி, மீசையெல்லாம் கையோடு வந்துவிட்டதாம்.
இதை பார்த்து பயத்திலும், விரக்தியிலும் அங்கேயே கதறி கதறி மொட்டை ராஜேந்திரன் அழுதார் என செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். ஏற்கனவே உறுவக்கேலிக்கு ஆளானதால், வெளி உலகை பார்க்கவே பயந்து வீட்டிற்குள்ளேயே 6 மாதம் முடங்கி விட்டாராம். அதன் பிறகு தற்போது அதுவே அவரின் தனித்துவமான அடையாளமாக மாறி, 58 வயதிற்கு மேல் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார் மொட்டை ராஜேந்திரன்.
இதையும் படிங்க :ஐய்யோ பார்த்தா மிஸ் பண்ணிட்டோமே? ஏகே-62வில் சம்பவம் பண்ண காத்திருந்த விக்கி – சந்தானம்