
Trailer
முத்தத்தை வச்சி முழுநேர படமா!.. செம ரொமண்டிக்!.. கவினின் கிஸ் டிரெய்லர் வீடியோ!..
Kiss: விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தவர் கவின். அதன்பின் திரைப்படங்களில் ஹீரோக்களின் நண்பர்களில் ஒருவராக சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவரே ஹீரோவாக மாறினார். தொடக்கத்தில் இவருக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. ஆனால் டாடா திரைப்படம் இவருக்கு கை கொடுத்தது. அதேபோல் ஹாரர் படமாக வெளிவந்த லிப்ட் படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
அடுத்து ஸ்டார் என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் ப்ரோமோஷனில் இவரை விஜய் ரேஞ்சுக்கு பில்டப் செய்தார்கள். இந்த படத்தில் கவின் நடித்த பல காட்சிகளும் அவர் செய்த பந்தா காரணமாக ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே ஸ்டார் படம் வெற்றி படமாக அமையவில்லை
. இயக்குனர் நெல்சனின் தயாரிப்பில் கவின் நடித்து வெளியான பிளடி பக்கர் திரைப்படமும் வெற்றி படமாக அமையவில்லை.
தற்போது கிஸ் என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் கவின். இந்த படத்தில் அயோத்தி படத்தில் நடித்து ரசிகர்களை அழவைத்த ப்ரீத்தி அஸ்ராணி ஹீரோயினாக நடித்திருக்கிறார். முத்தம் தொடர்பாக கவினிக்குள்ள மன நல பிரச்சனைகளை இப்படம் அலசுகிறது. அதோடு முத்தம் கொடுப்பதை பார்த்தாலே அந்த காதலர்களுக்குள் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து கொள்ளும் சக்தி கவினுக்கு இருப்பதாக சொல்லி ஒரு பேண்டஸி கலந்த ரொமான்டிக் காமெடி படமாக கிஸ் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை சில் படங்களில் நடித்த நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ் இயக்கி இருக்கிறார்.
இந்தப் படம் வருகிற 19ஆம் தேதி வெளியாக உள்ளது வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.