
latest news
பெரிய சம்பவம் இருக்கு!. கெத்து தினேஷ் தெறி மாஸ்!.. அதிரும் வேட்டுவம் கிளிம்ப்ஸ் வீடியோ!..
Vettuvam: அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இந்த படத்தில்தான் தினேஷும் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். இந்த படத்திற்கு பின் அட்டக்கத்தி தினேஷ் என அவரை எல்லோரும் அழைத்தார்கள். அதுவே அவர் அடையாளமாகவும் மாறியது..
அதன்பின் ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் உள்ளிட்ட எல்லா படங்களும் கவனம் பெற்றது. அம்பேத்கரின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து திரைப்படங்களை உருவாக்குவது ரஞ்சித்தின் ஸ்டைல். இவர் இயக்கிய மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட எல்லா படங்களுமே பேசப்பட்டது. அதோடு ஆர்யா, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.
அதன்பின் சியான் விக்ரமை வைத்து தங்கலான் என்கிற படத்தை இயக்கினார் ரஞ்சித். ஆனால் இந்த படம் இது ரசிகர்களுக்கு புரியாமல் போனது. இதனால் விக்ரம் அந்த படத்துக்காக போட்ட அத்தனை உழைப்பும் வீணாய் போனது. தற்போது கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா உள்ளிட்ட பலரையும் வைத்து வேட்டுவம் என்கிற திரைப்படத்தை ரஞ்சித் இயக்கி வருகிறார்.
இந்த படம் பற்றிய சமீபத்தில் ஊடகத்தில் பேசிய ரஞ்சித் ‘இந்த படத்தை முதலில் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக்க நினைத்தேன். ஆனால் அதன்பின் என் எண்ணம் மாறியது. அந்த கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வேறொரு உலகத்தில் அதை சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். அந்த உலகம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும். ரசிகர்கள் கொண்டாடும்படமாக இருக்கும். ஒரு சயின்ஸ் பிக்சன் ஜார்னனில் வேட்டுவம் படம் வெளியாகும்’ என அவர் சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில் இன்று தினேஷின் பிறந்தநாள் என்பதால் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறார்கள். அதில் வரும் சில காட்சிகள் ரசிகர்களிடம் கூஸ்பம்ப்ஸை ஏற்படுத்தியிருக்கிறது.