Good Bad Ugly: பில்லா மற்றும் மங்காத்தா திரைப்படங்கள் அஜித்துக்கு மாஸ் நடிகர் என்கிற இமேஜை ஏற்படுத்தியது. அஜித் என்றால் ஸ்டைலாக நடந்து வரவேண்டும், பக்கா ஆக்சன் செய்ய வேண்டும், பன்ச் வசனம் பேச வேண்டும் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், வேதாளம் படத்திற்கு பின் அஜித்துக்கு அப்படி ஒரு படம் அமையவில்லை.
விடாமுயற்சி: விஸ்வாசம் படம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் அந்த படத்தில் அஜித் மாஸ் ஹீரோவாக நடிக்கவில்லை. சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. ஏனெனில், வில்லன் குரூப்பிடம் அடி வாங்குவது போல பல காட்சிகளிலும் அஜித் நடித்திருந்தார்.
குட் பேட் அக்லி டீசர்: இந்நிலையில்தான் குட் பேட் அக்லி படத்தின் டீசர் பிப்ரவரி 28ம் தேதி இரவு 7 மணிக்கு வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. டீசரில் பக்கா மாஸான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. எனவே, இந்த டீசர் வீடியோ அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
‘கலக்கிட்ட மாமே… இதுதான் எங்களுக்கு வேணும் மாமே’.. என ஆதிக் ரவிச்சந்திரனை அஜித் ரசிகர்கள் உச்சிமுகுந்து பாராட்டி வருகின்றனர். அஜித் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை ரிப்பீட் மோடில் பார்த்து ரசித்து வருகிறார்கள். எனவே, டீசர் வெளியாகி 12 மணி நேரத்திலேயே யுடியூப்பில் இரண்டரை கோடி வியூஸை தாண்டியது.
டீசர் செய்த சாதனை: அதன்பின், டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் அதாவது 3.2 கோடி வியூஸை தாண்டி யுடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் அதிக வியூஸை பெற்ற டீசர் என்கிற சாதனையையும் பெற்றிருக்கிறது. எனவே, ரெக்கார்ட் பிரேக்கிங் சம்பவம் என படக்குழு மகிழ்ச்சியுடன் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறது.
டீசர் பார்த்த திரைப்பிரபலங்கள் பலருமே ஆதிக் ரவிச்சந்திரனை பாராட்டி வருகிறார்கள். அதோடு, டீசர் பார்க்கும்போதே படம் ஹிட் என்பது தெரிகிறது. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என பலரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். விண்டேஜ் லுக்கில் அஜித் பல கெட்டப்பில் வருகிறார். கண்டிப்பாக குட் பேட் அக்லி படம் அஜித் ரசிகர்களுக்கு முழு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.