Freedom teaser: சுப்பிரமணிய புரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சசிக்குமார் அதன்பின் பல படங்களிலும் நடித்து வருகிறார். அதுவும் கடந்த சில வருடங்களாகவே நல்ல கதையம்சம் கொண்ட, மக்கள் பிரச்சனைகளை பேசும் படங்களில் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்து வெளியான அயோத்தி, நந்தன் போன்ற படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றது.
அடுத்து அவர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தை இயக்கியிருந்தார். இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் முறைகேடாக சென்னையில் வந்து தங்க என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. ஒரு அழகிய ஃபீல் குட் படமாக இப்படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
இந்நிலையில், மீண்டும் இலங்கை அகதிகள் தொடர்பான ஃபீரீடம் என்கிற படத்தில் சசிக்குமார் நடித்திருக்கிறார். இந்த படத்தையும் அறிமுக இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ளார். பாண்டியன் பரசுராமன் என்பவர் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இலங்கை அகதிகளை முறைகேடாக அடைத்து வைக்கிறார்கள். அதில் சசிக்குமாரும் ஒருவர். அங்கிருந்து சசிக்குமார் உள்ளிட்ட சிலர் தப்பிக்க முயற்சி செய்கிறார்கள்.
அவர்களுக்கும் போலீசாருக்கும் நடக்கும் மோதலே கதையின் மையக்கருவாக இருக்கிறது. இது ஒரு உண்மை சம்பவம் என சொல்லப்படுகிறது. இந்த படம் வருகிற ஜூலை மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகி பேசு பொருளாக மாறியிருக்கிறது.
இலங்கை அகதிகளை போலீசார் ஒரு இடத்தில் கூட்டமாக தங்க வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என சசிக்குமார் முயற்சி செய்கிறார். அப்போது அவருக்கும் போலீசாருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இது தொடர்பான காட்சிகள் டீசரில் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் ஜெய்பீம் படத்தில் கலக்கிய லிஜோமல் ஜோஸ் இலங்கை அகதிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…