எதுக்குடி இந்த பாடு படுத்துறீங்க...ஆண் பாவம் பொல்லாதது டிரைலர்

ஆண் பாவம் பொல்லாதது படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
சின்னத்திரையில் பிரபலமானவர் லியோ ராஜ். 2013ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் புகழ்பெற்றவர் இவர். சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் அதிக ரசிகர்களை பெற்றிருந்தார்.
சின்னத்திரையில் வெற்றியை அடுத்து வழக்கம்போல இவரும் வெள்ளிதிரைக்கு அடி எடுத்து வைத்தார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆனால் முதல் படமே பிளாப் ஆனது. தொடர்ந்து நடித்தலும் ஜோ படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது.
இந்த நிலையில் இவரது நடிப்பில் ஆண் பாவம் பொல்லாதது படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் லியோவுக்கு இப்படம் நிச்சயம் வெற்றிடை கொடுக்கும் என்பது கண்கூடாகவே தெரிகிறது.