அசைக்க முடியாத சக்தி... டிரெய்லரில் உணர்த்திய அஜித்! வெளியானது விடாமுயற்சி டிரெய்லர்

by Rohini |   ( Updated:2025-01-16 13:22:16  )
vidamuyarchi
X

விடாமுயற்சி: அஜித் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தை மகிழ்திருமேனி இயக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் டீஸர் மற்றும் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஹாலிவுட் படமான பிரேக் டவுன் என்ற படத்தின் ரீமேக்தான் விடாமுயற்சி என்று கூறப்படுகிறது. அதற்கான ரைட்ஸ் பிரச்சினையும் ஒரு பக்கம் இருப்பதாக செய்திகள் வெளியானது. அந்தப் பட நிறுவனத்திடம் கேட்காமலேயே இவர்கள் விடாமுயற்சி படத்தை எடுத்ததாகவும் அதற்காக 100 கோடி இழப்பீடு கேட்டதாகவும் கூறப்பட்டது.

காப்பி ரைட்ஸ் பிரச்சினை: ஆனால் 100 கோடி இப்போது 30 கோடியில் வந்து நிற்பதாக தெரிகிறது. இருந்தாலும் ரைட்ஸ் பிரச்சினை எல்லாம் முடிந்து படம் சென்சாருக்கும் அனுப்பி U/A சான்றிதழும் வழங்கப்பட்டிருக்கிறது. படம் பொங்கலுக்கு வருவதாக இருந்து அதன் பின் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது படக்குழு. பின் ஜனவரி மாதம் கடைசி அல்லது பிப்ரவரியில் வரும் என்று பல செய்திகள் வெளியாகின.

எதிர்பார்ப்பை எகிற வைத்த டிரெய்லர்: இதற்கிடையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. டிரெய்லர் பக்கா ஹாலிவுட் தரத்தில் வெளியாகியிருக்கிறது. ஒரு தரமான கிரைம் திரில்லர் படமாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது. மகிழ்திருமேனி அவருடைய ஜானரில் இருந்து மாறாமல் இருக்கிறார் என்பதையும் இந்த டிரெய்லர் நமக்கு உணர்த்தியிருக்கிறது. பிப்ரவரி 6 ஆம் தேதி படம் ரிலீஸ் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

சமீபத்தில்தான் அஜித் தன் ரேஸ் அணியுடன் கார் ரேஸ் பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பிடித்தார். அவர் வெற்றிக்கு பல திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறினர். அரசியல் பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறியிருந்தனர் .ஆனால் இதுவரைக்கும் விஜய் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. இது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஏப்ரலில் அஜித்தின் குட் பேட் அக்லி படமும் வெளியாக இருக்கின்றது. இந்த வருடம் அடுத்தடுத்து அஜித்தின் படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் குஷியாக இருக்கிறார்கள். ஆனால் அடுத்த பட அறிவிப்பு அக்டோபர் மாதத்திற்கு பிறகுதான் வெளியாகும் என்று அஜித் அறிவித்திருக்கிறார். அதுவரை அவர் ரேஸில் கவனம் செலுத்த இருப்பதால் செப்டம்பர் மாதம் வரை ரேஸ் நடைபெற இருக்கிறது.



Next Story