Akhanda 2: சவுண்ட கண்ட்ரோல்ல வச்சிக்கோ!.. உறுமும் பாலையா!.. அகாண்டா 2 வீடியோ அதிருது!..
தெலுங்கில் பரபர ஆக்சன் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. ரசிகர்கள் இவரை சுருக்கமாக பாலையா என அழைக்கிறார்கள். போயாபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பாலையா இரட்டை வேடங்களில் நடித்து 2021ம் வருடம் வெளியான திரைப்படம் அகாண்டா.கிட்டத்தட்ட பாலா இயக்கிய நான் கடவுள் படத்தை ஒட்டிய கதை என்றாலும் அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் பாலையா பேசிய பன்ச் வசனங்கள் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸை ஏற்படுத்தியது. அதோடு, பாலையாவை இயக்குனர் காட்டிய விதம் இப்படத்தை சூப்பர் ஹிட் அடித்து வைத்தது
உலகமெங்கும் உள்ள பாலையா ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி தீர்த்தார்கள்.இந்த படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அகண்டா 2 படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தையும் போயாபட்டி ஸ்ரீனுவே இயக்கியிருக்கிறார். ஏற்கனவே படத்தின் ப்ரமோஷன் வீடியோ வெளியானது.
இமயமலையில் சூலாயுதத்தை தலைக்கு மேலே சுற்றியபடி சுத்தி நிற்பவர்களை கழுத்தை பாலையா அறுக்கும் காட்சிகள் அதிர வைத்தது. இந்நிலையில் ‘அகாண்டா 2 தாண்டவம் - பிளாஸ்டிங் ரோர்’ என்கிற தலைப்பில் தற்போது ஒரு புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது.
இதில் ரவுடிகளோடு பாலைய சண்டை போடும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அதில் ‘சவுண்ட கண்ட்ரோல்ல வச்சுக்கோ.. எந்த சவுண்டுக்கு சிரிப்பேன்.. எந்த சவுண்டுக்கு வெட்டுவேன்னு எனக்கே தெரியாது.. உன்னால கற்பனை பண்ணி கூட பார்க்க முடியாது’ என பாலையா பன்ச் வசனம் பேசுகிறார். அகாண்டா 2 திரைப்படம் வருகிற டிசம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
