அனிமேஷனில் அமரேந்திர பாகுபலி!.. Baahubali The Eternal War டீசர் வீடியோ சும்மா தெறி!..
இப்போது அல்லு அர்ஜுன், ராம்சரண், பிரபாஸ், யாஷ், ரிசப் ஷெட்டி அவ்வளவு ஏன்?.. ரஜினி, சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற நடிகர்களுக்கும் தங்களின் படங்கள் பல மொழிகளிலும் வெளியாகும் ஃபேன் இந்தியா படமாக வெளியாக வேண்டும் என்கிற ஆசை வந்திருக்கிறது என்றால் இதற்கெல்லாம் அடித்தளம் போட்டது ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம்தான்.
தெலுங்கில் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 இரண்டு படங்களும் தமிழ் ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. அதிலும் பாகுபலி 2 திரைப்படம் 1800 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
இந்த படத்திற்கு பின் நடிகர் பிரபாஸ் நடிக்கும் எல்லா படங்களுமே தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி மொழிகளில் வெளியாகி வருகிறது. சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக பாகுபலி இருக்கிறது. எனில் அந்த படம் கொடுத்த அனுபவம் ரசிகர்கள் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும். சமீபத்தில் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை ஒன்றாக இணைத்து ஒரே பாகமாக Baahubali The Epic என்கிற பெயரில் வெளியிட்டார்கள். உலகம் முழுவதும் சேர்த்து பல ஆயிரம் தியேட்டர்களில் இப்படம் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்நிலையில்தான் Baahubali - The Eternal War part 1 படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது அமரேந்திர பாகுபலி இறந்தபின் அவரின் ஆன்மா மேல் உலகம் செல்கிறது. அங்கு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே நடக்கும் போரில் அவர் பங்கேற்பது போல கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த Baahubali - The Eternal War part 1 அனிமேஷன் படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அனிமேஷன் படத்தை இஷான் சுக்லா இயக்கியுள்ளார்.
பாகுபலி திரைப்படம் போலவே இந்த அனிமேஷன் படமும் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகம் 2017 ஆம் வருடம் வெளியாகவுள்ளது. அதற்கான டீசர் வீடியோவைத்தான் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த அனிமேஷன் படமும் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த டீச்சர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
