Good Bad Ugly: மாமே இது வேற லெவல்… வெளியான குட் பேட் அக்லி டீசர் புரோமோ…

Good Bad Ugly: அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் குறித்த புரோமோ வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
மார்க் ஆண்டனி வெற்றி படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார் அஜித்குமார். விடாமுயற்சி திரைப்படம் நடந்து கொண்டிருக்கும்போது குட் பேட் அக்லி திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது.
சமீபத்திய வருடங்களாகவே அஜித்குமார் ஒரு படம் முடிவதற்குள் இன்னொரு படத்தை அறிவிப்பதே இல்லை. இதனால் ரசிகர்கள் இந்த படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருந்தனர். இப்படத்தை தெலுங்கு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கிறது.
இப்படத்தின் டைட்டில் அறிவிப்பிலேயே ரசிகர்களை அதிர வைத்தனர். அஜித் மூன்று கெட்டப்புகளில் பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறார். பல வருடங்கள் கழித்து மீண்டும் அஜித் வித்தியாசமான வேடத்தில் இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே இப்படத்தின் சூட்டிங்கிலும் கலந்து கொண்டார். தற்போது படத்தின் பெருவாரியான படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இன்னும் 3 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மிச்சம் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருந்த நிலையில் தற்போது அவர் படத்திலிருந்து விலகி இருக்கிறார். மார்க் ஆண்டனி வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் ஜிவி பிரகாஷ் கூட்டணி அமைத்திருக்கிறார்.
இந்நிலையில் படம் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் டீசர் புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வரும் நவம்பர் 28ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அறிவிப்பு ப்ரோமோவில் வெள்ளை கோட் சூட்டில் நடிகர் அஜித் வருவது காட்டப்பட்டிருக்கிறது. மாமே இது வேற லெவல் எண்டெர்டெயின்மெண்ட் என மேனேஜர் சுரேஷ் சந்திரா குறிப்பிட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.