உச்சகட்ட பீதியால் அலறவிடும் ஜீவாவின் பிளாக்… டிரைலரே பயங்கரமா இருக்கே!...
Black: தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி கதை என்றால் அது திரில்லர் தான். அந்த வகையில் தற்போது புதிதாக பிளாக் திரைப்படம் இணைந்து இருக்கிறது. தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.
ஜீவா நடித்துள்ள ‘பிளாக்’ திரைப்படத்தை கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர், விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ தேதி எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கிறது. அதில் முழுக்க முழுக்க ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கரை மையப்படுத்தியே காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இருவரும் புதிய அபார்மெண்ட்டுக்குள் சென்று அங்கு சந்திக்கும் அமானுஷியங்கள் நிறைந்தே கதை அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க திரில்லர் ஜானரில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் சினிமாவுக்கு பழக்கப்பட்ட கதை போல தெரிந்தாலும் திரைக்கதையில் இயக்குனர் மிரட்டி இருப்பதையே டிரைலர் காட்சிபடுத்தி இருக்கிறது.
மற்ற கதைகள் கூட சில இடங்களில் சறுக்கும். ஆனால் தமிழ் சினிமாவின் மினிமம் கியாரண்டி கதையில் முக்கிய இடம் திரில்லர் ஜானருக்கு உண்டு. இதே ஜானரில் கடந்த மாதம் வெளியான டிமாண்டி காலனி2 ஹிட்டடித்த நிலையில் இந்த படமும் நல்ல வரவேற்றை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.