Kaandha Trailer: ஊதி தள்ள நான் மண் அல்ல.. மலை.. ‘காந்தா’ பட டிரெய்லரில் மாஸ் காட்டிய துல்கர்
துல்கர் சல்மான் நடிக்கும் காந்தா படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை செல்வா மணி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை துல்கர் சல்மானின் பேவரர் பிலிம்ஸ் உடன் இணைந்து ராணாடகுபதி, ஜோன் வர்க்கீஸ் மற்றும் பிரசாந்த் பொட்லூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். துல்கர் சல்மானின் கெரியரில் இந்த படம் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்பதை ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே நம்மால் உணர முடிகிறது.
இந்தப் படம் நவம்பர் 14 அன்று உலகெங்கிலும் வெளியாக இருக்கின்றது. சமீப காலமாக துல்கர் சல்மான் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வந்திருக்கின்றன. அந்த வகையில் காந்தா திரைப்படம் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கும் என்று தெரிகிறது. படத்தின் பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
சமீபத்தில் வெளியான படத்தின் டைட்டில் பாடல் சோசியல் மீடியாக்களில் மிகவும் வைரலானது. அதோடு பனி மலரே மற்றும் கண்மணி நீ என தொடங்கும் பாடல்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்த படத்தில் சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ போர்சே, ராணா டகுபதி ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1950 களில் மெட்ராஸ் பின்னணியில் நடக்கும் கதையை மையப்படுத்தி தான் இந்த படம் உருவாகி இருக்கின்றது. படம் ரிலீசாக இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் ட்ரைலர் வெளியாகி பெரிய அளவில் ஹைப்பை ஏற்படுத்தி இருக்கின்றது .விண்டேஜ் கெட்டப்பில் துல்கர் சல்மான் மாஸ் காட்டி இருக்கிறார். ஏற்கனவே மகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக ஜெமினி கணேசன் கெட்டப்பில் நடித்திருந்தார்.
அந்த வகையில் காந்தா திரைப்படமும் அவருக்கு இன்னொரு ஒரு சிறப்பை தரும் திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது. முன்பு ஒரு பேட்டியில் நடிகர் பிரித்விராஜ் ஒரு விஷயத்தை பகிர்ந்து இருந்தார். அதாவது தயாரிப்பாளர்கள் அவர்களுடைய வெவ்வேறு பரிமாணங்களிலும் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும். அந்த வகையில் ஒரு நடிகனாக நானும் வெவ்வேறு துறைகளில் ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என கூறியிருந்தார்.
அதை இப்போது துல்கர் சல்மான் நிரூபித்து வருகிறார். நடிகராக தயாரிப்பாளராக பாடகராக என எல்லா துறைகளிலும் அவர் மக்களிடையே பெரிய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அவருடைய தயாரிப்பில் சமீபத்தில் வெளியான லோகா திரைப்படம் வசூலிலும் சரி விமர்சனத்திலும் சரி நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் காந்தா திரைப்படமும் ஒரு தயாரிப்பாளராக அவரை அடுத்த கட்ட லெவலுக்கு கொண்டு போகும் திரைப்படமாக அமையும் என்பதை இந்த காந்தா திரைப்படத்தின் ட்ரெய்லர் மூலம் நமக்கு உணர்த்தியிருக்கிறார் துல்கர் சல்மான்.
