கம்பேக் கொடுப்பாரா கவின்? நாளை வெளியாகும் ‘மாஸ்க்’ படத்தின் டிரெய்லர்
தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் கவின். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகக் கூடிய திரைப்படம் மாஸ்க். இந்தப் படம் வரும் 21 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. படத்தில் ஆண்ட்ரியா முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் பற்றிய அப்டேட் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் தயாராகியிருக்கிறது.
குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் வேலு என்ற கேரக்டரில் கவின் நடித்திருக்கிறார். இயக்குனர் சொல்லும் போது இந்தப் படத்தின் கதை மிகவும் ராவாக இருந்ததாகவும் தணிக்கை கூட செய்ய முடியாத கதையாக இருக்கும் என்றும் கூறியதாக கவின் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு இந்தப் படத்தை கமெர்ஷியல் படமாக மாற்றுமாறு கவின் கூறியிருக்கிறார்.
கவின் படம் எனும் போது நகைச்சுவை அல்லது திரில்லர் படமாக இருக்கும் என நினைக்கவேண்டாம். ஆனால் இப்போது அது வணிக பொழுதுபோக்கு திரைப்படமாக மாறியிருக்கிறது. முன்பு இந்தப் படத்தை பற்றி ஆண்ட்ரியா குறிப்பிடும் போது இந்தப் படத்தில் நல்லவர்கள் என யாருமே இல்லை. அந்தளவு மோசமான கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
அப்படி மொசமான கேரக்டர்களில் நல்லவர்கள் யார் என்பதை ரசிகர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார். படத்திற்கு இசை ஜிவி பிரகாஷ்.படத்தை வெற்றிமாறன் தான் தயாரித்திருக்கிறார். எம்.ஆர்.ராதாவின் முக மூடியை அணிவித்து கொள்ளையடிப்பது போல கதை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.

கவின் நடிப்பில் வெளியான கடைசி இரு திரைப்படங்கள் பிளடி பெக்கர் மற்றும் கிஸ் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. அதனால் இந்தப் படத்தின் மூலம் கவின் கம்பேக் கொடுப்பாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
