அப்பா மாதியே ஆக்‌ஷனில் சீறும் சண்முக பாண்டியன்!. படைத்தலைவன் டிரெய்லர் வீடியோ..

by Murugan |
padaithalaivan
X

padaithalaivan

Padaithalaivan trailer: புரட்சிக்கலைஞர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். 2015ம் வருடம் தன் மகனை சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம் விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால், அந்த படம் சரியாக ஓடவில்லை. அதன்பின் மதுர வீரன் என்கிற படத்தில் நடித்தார் சண்முக பாண்டியன்.

இந்த படத்தில் அவரோடு சமுத்திரக்கனியும் நடித்திருந்தார். அதன்பின் தமிழன் என்று சொல் என்கிற படம் துவங்கப்பட்டது. இந்த படத்தில் விஜயகாந்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. படத்தின் பூஜையெல்லாம் போடப்பட்டு சில காட்சிகளையும் எடுத்தார்கள்.



ஆனால், விஜயகாந்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரால் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க முடியவில்லை எனவே, இப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின் அப்பாவை பார்த்துக்கொண்டார் சண்முக பாண்டியன். விஜயகாந்த் மரணமடையும் வரைக்கும் அவரை அக்கறையோடு கவனித்துக்கொண்டார்.

சண்முக பாண்டியனின் நடிப்பில் படைத்தலைவன் என்கிற படம் ஒரு வருடத்திற்கு முன்பு துவங்கப்பட்டது. தற்போது இப்படம் முடிவடைந்துவிட்டது. இன்று அப்படத்தின் டிரெய்லர் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இந்த டிரெய்லர் வீடியோவில் அசத்தலான சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

அப்பாவை போல ஆக்சன் காட்சிகளில் பின்னியெடுக்கிறார் சண்முக பாண்டியன். ஒரு மலை கிராம மக்களுக்கு அவரும், அவரின் யானையும் உதவி செய்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதோடு, டிரெய்லரின் இறுதியில் விஜயகாந்துக்காக எழுதப்பட்ட ’நீ பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல் ஒலிக்கிறது. மேலும், கேப்டன் விஜயகாந்தும் காட்டப்படுகிறார். விஜயகாந்தின் ரசிகர்களுக்கு இவை கூஸ்பம்ஸை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தை அன்பு என்பவர் இயக்கியுள்ளார்.


Next Story