இப்படி ஒரு கதையா?.. நிஜமாவே வேற மாறி!.. கார்த்திக் சுப்புராஜின் பெருசு டிரெய்லர் வீடியோ…

by Murugan |   ( Updated:2025-03-08 11:49:22  )
இப்படி ஒரு கதையா?.. நிஜமாவே வேற மாறி!..  கார்த்திக் சுப்புராஜின் பெருசு டிரெய்லர் வீடியோ…
X

Perusu Trailer: கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பெருசு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கும் நிலையில் இணையத்தளங்களில் ஹிட்டடித்து இருக்கிறது.

இளங்கோ ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பெருசு. வைபவ் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், சுனில், தீபா சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.


கார்த்திக் சுப்புராஜ் இயக்குனராக மட்டும் அல்லாமல் தயாரிப்பாளராகவும் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். தற்போது அவர் தயாரிப்பில் 16வது படமாக 'பெருசு' படம் தயாராகி உள்ளது.

மார்ச் 14ந் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் கடைசி காரியத்தில் நடக்கும் காமெடி கலாட்டாக்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட நடிகர்கள் எல்லாருமே காமெடியில் கலக்குவதால் படம் காமெடியில் கலக்கலாக இருக்கும் என நம்பப்படுகிறது.


அண்ணன், தம்பியான சுனில் மற்றும் வைபவ் இருவரும் முதல்முறையாக ஒரே படத்தில் நடித்துள்ளனர். க்ளீன் ஏ சர்டிபிகேட் என்பதால் குடும்ப ரசிகர்களுக்கு இது செட்டாகாது. டிரெய்லரிலேயே நிறைய டபுள் மீனிங் வசனம் இடம் பெற்றுள்ளது.

அதை பார்த்துவிட்டால் படத்தின் டைட்டில் இதற்குதானா என ரசிகர்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர். இருந்தும், பெருசு படத்தின் டிரெய்லர் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story