தாலி கட்டுனவன் எங்கடா? ஹாரர் பின்னணியில் வெளியான ‘ரஜினி கேங்க்’ பட டிரெய்லர்
அஷ்டகர்மா படத்தின் வெற்றிக்கு பிறகு மிஸ்ரி எண்டெர்ப்ரைஸ் வழங்கும் திரைப்படம் ரஜினி கேங்க். கமெர்ஷியல் ஹாரர் காமெடி திரைப்படமாக இந்த படம் தயாராகியிருக்கிறது. இந்தப் படத்தை ரமேஷ் பாரதி என்பவர் இயக்கியிருக்கிறார். படத்தை நடிகர் ரஜினி கிஷன் தயாரித்திருக்கிறார். இவர்தான் இந்தப் படத்தின் முதன்மை கேரக்டரிலும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
அந்தப் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல ஒரு ரெஸ்பான்ஸையும் பெற்றது. 30 வருடங்களாக மிஸ்ரி எண்டெர்ப்ரைஸ் சினிமாத்துறையில் சிறந்து விளங்கி வருகின்றது. பைனான்ஸ், வினியோகம், தயாரிப்பு என சினிமா துறையில் ஆக்டிவாக இருந்து வருகிறது இந்த மிஸ்ரி எண்டெர்ப்ரைஸ். ஜெய்ஹிந்த் மற்றும் அஷ்டகர்மா போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக தயாரிப்பில் இறங்கியிருக்கிறது இந்த நிறுவனம்.
ஒரு பெரிய ஸ்கேலில் இந்தப் படம் உருவாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஓடிப்போன ஒரு ஜோடி எதிர்பாராத விதமாக சில சம்பவங்களை சந்திக்க நேரிடுகிறது. அதனால் ஏற்படும் திகில் சம்பவங்கள் மற்றும் காமெடியான சில சம்பவங்களை இந்தப் படம் சொல்ல வருகிறது. கலகலப்பான திரைக்கதையில் வணிக ரீதியில் இந்தப் படம் காமெடியாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் இயக்குனரான ரமேஷ் பாரதி ஆரம்பத்தில் ஒரு எடிட்டராகத்தான் தன்னுடைய கெரியரை ஆரம்பித்திருக்கிறார். இதற்கு முன் பிஸ்தா என்ற படத்தை இவர் இயக்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் உப்பு புளி காரம் மற்றும் கனா காணும் காலங்கள் என்ற வெப் தொடரையும் இவர் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி கேங்க் படத்தின் மூலம் ஒரு தனித்துவமான கதையை பெரிய திரைக்கு கொண்டு வருகிறார்.
இந்தப் படத்தில் ரஜினி கிஷன் ஹீரோவாகவும் திவிகா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், முனிஷ்காந்த் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதோடு ப்ளூ என்ற பெயரில் ஒரு நாயும் கதை முழுக்க டிராவல் செய்கிறது. நான்கு பாடல்கள் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஜேம்ஸ் ரூபர்ட் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இப்போது போஸ்ட் புரடக்ஷனில் இந்தப் படம் இருக்கிறது. இந்த வருடத்தின் இறுதியில் படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
