ரியோராஜின் ஸ்வீட் ஹார்ட்… இன்னொரு ஜோ போலவே இருக்கே! ட்ரெய்லரே மாஸா மச்சி!

SweetHeart: ரியோ ராஜ் நடிப்பில் அடுத்த படமான ஸ்வீட் ஹார்ட் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் ஹிட் அடித்து இருக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருக்கும் ரியோ ராஜ் கோலிவுட்டில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ஜோ படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் ஹிட் அடித்தது.
இதை தொடர்ந்து ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ரியோவுடன் கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெடின் கிங்ஸ்லி, ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்டவர்கள் நடித்து இருக்கின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை யுவன் ஷங்கர் ராஜா, சிலம்பரசன் வெளியிட்டனர். அப்போதே இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வைரலானது. இப்படத்தினை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.
முழுக்க முழுக்க காதல் படமாகவே இதுவும் அமைந்துள்ளது. ரியோ அலட்டல் இல்லாமல் நடித்திருக்க மீண்டும் ஒரு சூப்பர்ஹிட் படத்துக்கும் தயாராகி விட்டார் என்றே சொல்லலாம். படத்தின் டிரெய்லரின் ஆரம்பத்திலேயே ஆச்சரியமான காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ரியோ மற்றும் கோபிகா நடிப்பில் முழுக்க முழுக்க பிரஷ் காதல் கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஜோ படத்தில் ஸ்லோ ரொமான்டிக் கதையாகவும் இப்படத்தில் ஜென் சி கதையாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
டிரெய்லர்: https://www.youtube.com/watch?v=S2Brsjl_1gg