Robinhood: ஃபர்ஸ்ட் டைம் ஹீரோவாக மொட்டை ராஜேந்திரன்!.. ராபின்ஹூட் டிரெய்லர் வீடியோ!..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர்தான் மொட்டை ராஜேந்திரன். பல படங்களில் சண்டை நடிகராக நடித்துவந்த இவர் நான் கடவுள் படத்தில் வில்லனா நடித்தார். அதன்பின் சந்தனத்தோடு இணைந்து காமெடி படங்களில் நடிக்க தொடங்கினார். அது அவருக்கு கை கொடுத்ததால் தொடர்ந்து அது போன்ற வேடங்களிலேயே நடித்து வருகிறார். இவரை திரையில் பார்த்தாலே சிரிக்கும் அளவுக்கு ரசிகர்களிடம் ரீச் ஆகி இருக்கிறார் மொட்டை ராஜேந்திரன். கரகரப்பான குரல் இவரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இதுவரை காமெடி நடிகராக மட்டுமே நடித்த வந்த மொட்டை ராஜேந்திரன் முதன்முதலாக ராபின்ஹூட் என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். 1980களில் கதை நடப்பது போல இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக் பழனியப்பன். 1980களில் தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு புழக்கத்தில் இருந்தபோது ஒரு கிராமத்தில் ஒருவருக்கு பெரிய பரிசு விழுகிறது. அதை வாங்குவதற்கு நடக்கும் போட்டி மற்றும் பிரச்சனைகளை ராபின்ஹுட் படத்தில் காமெடியாக சொல்லி இருக்கிறார்கள்.
இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவை இயக்குனர் ஹெச்.வினோத் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மேலும் படத்தின் விஷ்வல் நன்றாக இருக்கிறது. காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இசை பொருத்தமாக இருக்கிறது. டிரெய்லரை பார்க்கும்போதே படம் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டுகிறது. படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள்’ என சொல்லி இருக்கிறார்.
