ஆர்ப்பாட்டமில்லாத சரத்குமார்150… மல்லுவுட் ஸ்டைலில் தமிழில் ”தி ஸ்மைல்மேன்”.. மிரட்டும் டிரைலர்

by Akhilan |
தி ஸ்மைல் மேன்
X

தி ஸ்மைல் மேன்

The Smile man: ஆர்.சரத்குமார் நடிப்பில் 150 திரைப்படமான தி ஸ்மைல் மேன் திரைப்படத்தினை டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

8 தோட்டாக்கள், ஜீவி திரைப்படத்தில் ஹீரோவாக வெற்றி நடித்த "மெமரீஸ்" திரைப்படத்தினை சைக்காலஜி-த்ரில்லர் பாணியில் உருவாக்கிய ஷ்யாம், பிரவீன் என்ற மலையாள இயக்குனர்கள் டைரக்ஷனில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் தி ஸ்மைல் மேன்.

இப்படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சிதம்பரம் நெடுமாறன் என்னும் காவல் அதிகாரி வேடத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க இருக்கிறார். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு அடுத்த ஒரு வருடத்திற்குள் மொத்த ஞாபகங்களை மறக்கும் இக்கட்டான நிலையில் சீரியல் கில்லர் ஒருவரை கண்டுபிடிக்கும் கதையை மையமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுவாக மலையாளத் திரைப்படம் தான் க்ரைம் திரில்லர் படங்களில் வித்தியாசமான கதைகளை கொடுத்து சூப்பர் ஹிட் கொடுக்கும். அந்த வகையில் பல ஆண்டுகள் கழித்து தமிழில் ஒரு வித்தியாசமான படமாக தி ஸ்மைல் மேன் அமைய இருக்கிறது.

இப்படத்தில் சீரியல் கில்லர் ஒருவர் கொலை செய்துவிட்டு அதை பொது இடங்களில் போட்டு விட்டு செல்கிறார். கடைசியில் சிதம்பரம் நெடுமாறன் ஆன சரக்குமாரையே அவர் கொல்ல துணிவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் பின்னணி செய்யும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் அப்பிளாஸ் வாங்கிக் கொண்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் சரத்குமார் நடிப்பில் திரைப்படம் 150 ஆவது படம் என்பதால் தற்போது படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Next Story