1. Home
  2. Trailers

King: எனக்கு ஒரு பேர் இருக்கு!... வேட்டையாடும் ஷாருக்கான்!.. கிங் டீசர் எப்படி இருக்கு?...

king

King teaser

பாலிவுட்டில் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். துவக்கத்தில் காதல் கதைகளில் நடித்து ரொமான்ஸ் செய்து வந்தவர் ஒரு கட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறினார். இவரின் பல படங்கள் சூப்பர் ஹிட். கோலிவுட் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படம் உலகமெங்கும் 1300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் ஷாருக்கான் இருக்கிறார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் உலகமெங்கும் உள்ள இந்தியர்கள் இவரின் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஜவான் படத்திற்கு பின் கிங் என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி இருக்கிறார். இந்நிலையில் இன்று ஷாருக்கானின் 60வது பிறந்த நாள் என்பதால் இந்த படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

அந்த டீசரில் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ‘நான் பல பேரைக் கொலை செய்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான கொலைகள்.. அவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று நான் பார்த்ததில்லை. என் முன்னே இருக்கும் அவர்கள் கண்களில் பயத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன்.. பல நாடுகள் என்னை தேடுகிறது. இந்த உலகம் எனக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறது’ என்று ஷாருக்கான் வாய்ச் ஓவர்லாப்பில் பேசும் வசனங்கள் அதில் இடம்பெற்றிருக்கிறது.

டீசரில் இடம் பெற்றிருக்கும் காட்சிகளை பார்க்கும்போது ஷாருக்கான் ஒரு பெய்ட் கில்லாக வேலை செய்பவர் எனத் தெரிகிறது. பணத்திற்காக கொலை செய்யும் ஷாருக்கான் ஒரு கட்டத்தில் மனம் திருந்து வில்லன் குரூப்பை காலி செய்வர் என கணிக்கப்படுகிறது. அல்லது ஏதோ விஷயத்தில் பாதிக்கப்பட்டு அவர் பலரையும் வேட்டையாடுவார் எனவும் தோன்றுகிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.