1. Home
  2. Trailers

அஜித்துக்கே டஃப் கொடுக்குறாரே.. டிடிஎஃப் வாசனின் ‘ஐபிஎல்’ படத்தின் டீஸர் வெளியீடு

ajith
டைட்டிலிலேயே மாஸ் காட்டும் டிடிஎஃப் வாசன்.. ஐபிஎல் படத்தின் டீசர் எப்படி இருக்கு


பிரபல யுடியூப் பிரபலமான டிடிஎஃப் வாசன் நடிக்கும் புது படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. ஐபிஎல் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் நடிகர் கிஷோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கூடவே நடிகை அபிராமியும் நடித்திருக்கிறார். ஏற்கனவே டிடிஎஃப் வாசன் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. அவருடைய ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக அவருடைய ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் அவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.கடந்த ஆண்டு மதுரையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் போது வண்டியூர் டோல்கேட் அருகே காரில் செல்போன் பேசியபடியே சென்றதால் அண்ணாநகர் காவல் துறையினர் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அதோடு இருசக்கரவாகனம் சாகசம் செய்து அதை அவருடைய யுடியூப்பில் சேனலில் பதிவிடுவதால் அதை பார்க்கும் சிறுவர்களும் இளைஞர்களும் அதை பின்பற்றி எந்தவொரு பயிற்சியும் இல்லாமல் இவர்களும் செய்ய தொடங்குகின்றனர். இதனால் பல பேர் காயமடைந்தும் இருக்கின்றனர். டிடிஎஃப் வாசனுக்கு இளைஞர்கள் ஆதரவை தந்தவண்ணம் இருக்கின்றனர்.

இவர் எங்கு சென்றாலும் டிடிஎஃப் வாசனை பின் தொடர்ந்து அவரை சூழ்ந்து கொள்கின்றனர். இந்த நிலையில்தான் இயக்குனர் செல்அம் இயக்கத்தில் டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கமிட் ஆனார். ஆனால் அந்த படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டார். அதன் பிறகு அந்தப் படத்தில் கூல் சுரேஷ் ஹீரோவாக நடிப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இதற்கிடையில் டிடிஎஃப் வாசன் நடிப்பில் ஐபிஎல் என்ற பெயரில் ஒரு படம் தயாராகி அந்தப் படத்தின் டீசரும் இப்போதும் வெளியாகியிருக்கிறது. அதில் டிடிஎஃப் வாசனுக்கு பேர் டைட்டிலில் ரேஸிங் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் ஒரு காட்சியில் டிடிஎஃப் வாசன் பைக்கை திருக்கி ரேஸுக்கு போகிற மாதிரி ஒரு சீன் வைக்கப்பட்டிருக்கிறது.

அஜித் படங்களில் எப்படியாவது ஒரு சீனில் பைக் ரேஸ் அல்லது கார் ரேஸை காட்டும்விதமாக காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதே போல் வாசனும் ஒரு காட்சியில் பைக்கை வேகமாக ஓட்டுகிறார். அதே போல் மாஸ் பஞ்ச் டையலாக் எல்லாம் பேசியிருக்கிறார். இந்த டீசர் வெளியான பிறகு வாசனுக்கு இளைஞர்கள் பெரும் ஆதரவை கொடுத்து வருகின்றனர். 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.