விஜய் இடம் இவருக்குதான்! ஆக்‌ஷன்லாம் மாஸா இருக்கே!.. விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ டிரெய்லர் வீடியோ!..

by MURUGAN |
ace trailer
X

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் இயல்பான நடிப்பை கொடுத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர். மற்ற ஹீரோக்களை போல ஓப்பனிங் சாங், அழகான கதாநாயகி, 4 பாட்டு, 4 ஃபைட், பன்ச் வசனம் என யோசிக்காமல் நல்ல கதைகள் அல்லது கதாபாத்திரங்களில் நடிப்பவர் இவர்.

துவக்கத்தில் பல படங்களிலும் கதையின் நாயகனாகவும் நடித்த இவர் ஒருகட்டத்தில் வில்லன் நடிகராக மாறினார். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாகவும் நடித்தார். அதேபோல், பாலிவுட்டுக்கும் போய் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்தார்.

ஹிந்தியில் சில வெப் சீரியஸ்களிலும் நடித்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். கடந்த சில வருடங்களாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் படங்கள் வெற்றியை பெறவில்லை. மகாராஜா படம் மட்டுமே வெற்றி பெற்றது. முன்பெல்லாம் மாதத்திற்கு இரண்டு விஜய் சேதுபதியின் படங்கள் வெளியாகும். ஆனால், இப்போது அது குறைந்துவிட்டது.


இப்போது ஆறுமுகக்குமார் என்பவர் இயக்கியுள்ள ஏஸ் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் சிங்கப்பூரில் நடைபெற்றிருக்கிறது. இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜாஸ்பர் சுப்பையா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், பப்லு பிரித்திவிராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு இந்த டிரெய்லர் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். டிரெய்லரில் விஜய் சேதுபதி மிகவும் அழகாக இருக்கிறார். இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்திருப்பது தெரிகிறது. மேலும், பக்கா ஆக்சன் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது.

டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் ’ஆக்‌ஷன் காட்சியெல்லாம் பட்டாஸா இருக்கே. அடுத்த விஜய் இவர்தான்’ எனவும் பதிவிட்டு வருகிறார்கள்.



Next Story