மிஷ்கின் இயகத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெய்ன் பட்த்தின் முதல் பாடல் இன்று வெளியானது.
கலைப்புலி தானு தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கலையரசன், பப்லு மற்றும் டிம்பிள் ஹாதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வழக்கமான தனது பாணியிலிருந்து விலகி கமர்சியலாக எடுத்துள்ளார் மிஷ்கின்.
விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் பாடல் வரிகள் வீடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். கனக்குழிகாரா என்று துவங்கும் இந்த பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். இப்படத்திற்கு இசையையும் மிஷ்கினே செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
