கடந்த பல வருடங்களாகவே இன்ஸ்டாகிரம், யுடியூப் போன்ற சமூகவலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருபவர் திருச்சி சாதனா
சமீபத்தில் சேலத்தை சேர்ந்த வழக்கறிஞர் அஜித் என்பவர் சமூக வலைதளங்களில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை சீரழிக்கும் வகையில் ஆபாச உடை அணிந்தும், பாலியல் உணர்வுகளை தூண்டுவது போல ஆபாசமாக பேசுவதாகவும் திருச்சி சாதனா, தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்ததில் வழக்கறிஞர் அஜித் கூறிய புகார் உண்மை என தெரியவந்தது. ஒருபக்கம், திருச்சி சாதனா முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் சமூகவலைத்தள நிறுவனங்களுக்கு சைபர் கிரைம் போலீசார் புகார்களை அனுப்பினார்கள். இதையடுத்து, திருச்சி சாதனா கைது செய்யப்படுவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். தற்போது அவரின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டிருக்கிறது..

இதைத்தொடர்ந்து தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள திருச்சி சாதனா ‘நான் மட்டும்தான் பிரபலம் என்பது போல என்னை குறி வைத்து பலரும் பல வேலை செய்கிறார்கள்.. யுடியூப்பில் வரும் வருமானத்தை வைத்துதான் நான் பிழைப்பு நடத்தி வருகிறேன். என்னோட யூடியூப் சேனல் முடக்கப்பட்டு விட்டது. இதனால் வீடு, காரர் லோன் செலுத்த முடியவில்லை.. இந்த வருமானத்தை நம்பி என் மகளை ஒரு நல்ல கல்லூரியில் படிக்க வைத்து வருகிறேன்..
வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று லட்சம் வரை பணம் கட்ட வேண்டும்.. இப்போது அதை எப்படி கட்டுவது என எனக்கு தெரியவில்லை. மீண்டும் கூலி வேலைக்கு செல்லவிருக்கிறேன். ஒரு நாளைக்கு 150 கிடைக்கும்.. கொஞ்ச நாளைக்கு வீடியோ போட மாட்டேன்.. திருச்சி சாதனா சமையல் யூடியூப் சேனல் மட்டும் ஆக்டிவாக இருக்கிறது.. அதற்கு மட்டும் மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். எனக்கு இப்போது என்ன பேசுவது என்று தெரியவில்லை.. அதேநேரம் நான் திருச்சி சாதனா.. கண்டிப்பாக திரும்பி வருவேன்’ என்று பேசியிருக்கிறார்.







