Cinema History
படப்பிடிப்புக்கே நம்பியார் வரலை.. படத்தில் மட்டும் எப்படி இருக்கார்… எல்லாம் எம்.ஜி.ஆர் பண்ணுன வேலை!..
தமிழ் சினிமாவில் நடிகர்கள் கூட்டணி போட்டு படங்களை ஹிட் கொடுப்பது என்பது பல காலங்களாக இருந்து வருகின்றன. கவுண்டமணி, செந்தில். மோகன், எஸ்.வி. சேகர், போன்ற நடிகர்கள் காமவாக நடித்த தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த கூட்டணிதான் எம்ஜிஆரும் நடிகர் நம்பியாரும் கொடுத்த கூட்டணி.
எம்.ஜி.ஆர் நடிக்கும் பெரும்பாலான படங்களில் அவருக்கு வில்லன் கதாபாத்திரமாக நம்பியார்தான் நடிப்பார். நினைத்ததை முடிப்பவன் திரைப்படத்தில் மட்டும் எம்.ஜி.ஆர் வில்லன் கதாபாத்திரத்திலும் நம்பியார் ஒரு நல்ல போலீஸ்க்காரர் பாத்திரத்திலும் நடித்திருப்பார்.
இந்த நிலையில் மிகப்பெரும் பட்ஜெட்டில் எம்.ஜி.ஆர் அப்போது நடித்த திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். உலகம் சுற்றும் வாலிபன் அப்போது வந்த திரைப்படங்களிலேயே எந்த படமும் கொடுக்காத அளவிலான ஒரு வெற்றியை கொடுத்தது.
இந்தப் படத்தில் வில்லனாக நடிகர் அசோகன் நடித்திருந்தார். எம்ஜிஆர் இதில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் மொத்த படப்பிடிப்புகளையும் உலகம் முழுக்க சுற்றி எடுத்து முடித்துவிட்டு வந்த எம்.ஜி.ஆர் இந்த படத்தை நம்பியாரிடம் போட்டுக் காட்டினார்.
எம்.ஜி.ஆர் செய்த வேலை:
படத்தை பார்த்த நம்பியார் படம் நன்றாக வந்துள்ளது ஆனால் படத்தின் நேரம் அதிகமாக உள்ளது. அதை குறைத்துக் கொண்டால் சரியாக இருக்கும் என கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் நீங்களும் இருந்தால் சரியாக இருக்கும் என்று நம்பியாரிடம் கூறியுள்ளார் எம்.ஜி.ஆர்.
மொத்த படப்பிடிப்பும் முடிந்து வந்த பிறகு எப்படி நான் திரும்ப அந்த படத்தில் நடிப்பது? என கேட்டுள்ளார் நம்பியார்.
அதன் பிறகு இயக்குனரிடம் பேசிய எம்.ஜி.ஆர் நம்பியாருக்காக தனியாக காட்சிகளை எல்லாம் எடுத்து அதை ஒட்ட வைத்து உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சேர்த்தார். இப்போதுவரை இந்த படத்தை பார்க்கும் யாருக்கும் நம்பியார் காட்சிகள் தனியாக எடுக்கப்பட்டு சேர்த்தது என்பதே தெரியாது அந்த வகையில் அந்த படத்தில் வேலை பார்த்திருந்தனர்.