மூன்று முடிச்சு படத்தில் ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? ஆனா, கமல்,ஸ்ரீதேவிக்கு தான் அதிகமாம்...
முதன்முதலில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கமல் இணைந்து நடித்த மூன்று முடிச்சு திரைப்படத்தில் மூவருக்கும் கொடுத்த சம்பளம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கே. விஸ்வநாத் இயக்கத்தில் தெலுங்கில் எடுக்கப்பட்ட 'ஓ சீத கதா' திரைப்படத்தின் ரீமேக்காக உருவான படம் தான் மூன்று முடிச்சு. ஆனால் இப்படத்தினை முதலில் மலையாள திரையுலகம் தான் மாட்டாரு சீதா என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அப்படத்தில் கமல் வில்லனாக நடித்தார். அதை தொடந்தே, தமிழில் ரீமேக்கினை பாலசந்தர் இயக்கினார். கமலின் வில்லன் வேடம் தற்போது ரஜினிக்கு சென்றது.
இப்படத்தில் நண்பர்களான கமலும், ரஜினிகாந்தும், ஸ்ரீதேவியினை விரும்புவார்கள். ஆனால் ஸ்ரீதேவிக்கு கமலினை தான் பிடிக்கும். இதில் கடுப்பான ரஜினிகாந்த், கமலினை கொன்றுவிடுவார். இதை தொடர்ந்து ஸ்ரீதேவி, ரஜினியின் தந்தையை திருமணம் செய்து கொண்டு சித்தியாக அவர் வீட்டுக்கே வருவார். இப்போது ரஜினிக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாகும். அப்போதைய காலத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.
‘மூன்று முடிச்சு’ படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்குத் முப்பதாயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. அறிமுக நாயகி ஸ்ரீதேவிக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்திருந்தார்கள். ஆனால், ரஜினிகாந்துக்கு மூவாயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் ரஜினிக்கு வருத்தம். எப்படியாவது கமலை போல தானும் சம்பளம் வாங்க வேண்டும் என்பதே லட்சியம் என ஸ்ரீதேவி தாயிடம் தெரிவித்தாராம்.
இதையும் படிங்க: கமல் படத்திற்கு ரஜினி வைத்த டைட்டில்… பொது மேடையில் சஸ்பென்ஸை உடைத்த கே எஸ் ரவிக்குமார்..