Connect with us
mari 1

Cinema News

பென்ஸ் கார்ல வந்து இறங்கிட்டு பிற்படுத்தப்பட்டவர்னு சொன்னா எப்படி? யாரை தாக்குகிறார்?

Tripur Subramaniyan: ஒரு திரைப்பட விநியோகஸ்தராகவும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியன் தற்போதைய சினிமா எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது? எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிறது என்பதை பற்றி ஒரு பேட்டியின் மூலம் கூறியிருக்கிறார். அதுவும் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை பற்றியும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியன்.

அதுமட்டுமல்லாமல் பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி 10 நாளில் நூறு கோடி கலெக்ஷனை அள்ளிவிட்டது என பெருமையாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் 250 கோடி பட்ஜெட்டில் எடுத்திருப்பார்கள். வசூலோ 100 கோடி. இதில் என்ன பெருமிதம் இருக்கிறது என்றும் விமர்சித்திருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியன்.

இதையும் படிங்க: நாள் முழுக்க படுக்கை சீன்… கேரளாவில் சிக்கிய 5 முன்னணி நடிகர்கள்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

மேலும் சமீபகாலமாக வருகிற படங்கள் பெரும்பாலும் முதல் பாதி படமாகவும் இரண்டாம் பாதியில் ஜாதியை மையப்படுத்தியும் தான் எடுக்கிறார்கள் எனக் கூறி இருக்கிறார். மேலும் அவர் கூறும் போது இந்த மாதிரி படம் எடுப்பதால் மக்கள் இதை விரும்ப மாட்டார்கள் .இன்றைய காலகட்டத்தில் யாருமே ஜாதியை பெரிதாக  நினைக்கவில்லை.

அனைவருமே இப்பொழுது படித்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் ஜாதி என்ற ஒரு பேருக்கு இடம் கொடுப்பதில்லை. படிக்காத முட்டாள்களும் இல்லை என திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருக்கிறார். மேலும் கேள்வி கேட்ட நிருபவரை பார்த்து  ‘இத்தனை நாளாக இதை நீங்கள் பேட்டி எடுத்துக்கொண்டு வருகிறீர்கள். என்றைக்காவது நீங்கள் யார்? உங்கள் ஜாதி என்ன நான் கேட்டிருக்கிறேனா? கேட்டதில்லையே.

இதையும் படிங்க: விஜய் படத்தின் சிடி-ஐ உடைத்து போட்ட கவின்!. சினிமா மேல் அவ்வளவு லவ்வா!..

யாருமே கேட்க மாட்டார்கள். அப்படியும் கேட்டால் பைத்தியக்காரன் தான் கேட்பான். இந்த மாதிரி காலத்தில் நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நீங்களே போய் மேடையில் சொல்கிறீர்கள், நாங்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று.  பிற்படுத்தப்பட்டவர்கள் என லேபிள் வைத்திருக்கிறீர்களா? நீங்கள் தான் சொல்கிறீர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று.

பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றி பேசுபவர்கள் எதில் வருகிறார்கள் என்றால் பென்ஸ் காரில் வந்து இறங்குகிறார்கள். மூன்று கோடி காரில் வந்து இறங்கும் நீங்களா படுத்தப்பட்டவர்கள்? விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை சினிமாவில் மட்டும்தான் காட்டுகிறீர்கள்.விளிம்பு நிலை வாழ்க்கையா வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?

இதையும் படிங்க: மீனாவை திட்டும் ரோகிணி… பாக்கியாவை கடுப்பேத்தும் கோபி… திட்டு வாங்கிய பாண்டியன்..

பணம் இருக்கிறவன் முற்படுத்தப்பட்டவர். படம் இல்லாதவன் பிற்படுத்தப்பட்டவர். இதுதான் இப்போதைய சூழ்நிலை என திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். இவர் மறைமுகமாக தமிழ் சினிமாவில் இருக்கும் யாரையோ கூறுவதாக ரசிகர்கள் இந்த வீடியோ பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் ஜாதியை மையப்படுத்தி படம் எடுக்கும் இயக்குனர்கள் யார் யார் என அனைவருக்கும் தெரியும் .மேடையில் அதிகளவு ஜாதியை பற்றி பேசுபவர் யார் என்றும் தெரியும். அதனால் இவர்களில் யாரையோ ஒருவரை தான் திருப்பூர் சுப்பிரமணியன் மறைமுகமாக பேசி இருக்கிறார் என இந்த செய்தி மூலம் நமக்கு தெரிய வருகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top