Trisha: ஆய்த எழுத்து `யாக்கைத் திரி’ பாடலுக்கு சித்தார்த்தும் திரிஷாவும் வைப் செய்ததை ஒரு சினிமா நிகழ்ச்சியில் நீங்கள் பார்த்திருக்கலாம். மணிரத்னம் இயக்கத்தில் 2004-ல் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த ஆய்த எழுத்து படத்தில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்த பாடல்தான் அது. உண்மையில், ஆய்த எழுத்து படத்தில் சித்தார்த் நடிப்பதாகவே இல்லை. அவர் எப்படி ஆய்த எழுத்து அர்ஜூன் ஆனார் தெரியுமா?
ஆந்திராவின் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் ஜார்ஜ் ரெட்டி என்பவரின் உண்மைக் கதையைக் கருவாகக் கொண்டு மணிரத்னம் எழுதிய திரைக்கதைதான் ஆய்த எழுத்து. தமிழின் கடைசி உயிரெழுத்தான ஆய்த எழுத்தைக் குறிக்கும் வகையில் மூன்று வெவ்வேறு பின்புலம் கொண்ட கேரக்டர்களை ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கும் கதைதான் திரைக்கதை.
இதையும் படிங்க: சினிமாவில் பானுப்பிரியா நடிக்காதது இதுக்குத்தானா? அவருக்கு சரியான ஜோடி அந்த ஹீரோவாம்..!
படம் 2004 மே 21-ம் தேதி ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழில் ஆய்த எழுத்தாக உருவான அதேநேரத்தில், வேறு மூன்று நடிகர்களை வைத்து யுவா என்ற பெயரில் இந்தியிலும் எடுத்தார் மணிரத்னம். டப் செய்தால் கதையோட்டம் பாதிக்கப்படும் என்று நினைத்து இதை அவர் செய்தார்.
தமிழில் நடித்த நடிகர்களில் இஷா தியோல் தவிர அனைவருமே இந்தியில் வேறு நடிகர்கள். முக்கியமான ஹீரோவான சூர்யா ஜோடியாக இஷா தியோல் இந்தப் படத்தில் அறிமுக நடிகையாக நடித்திருந்தார். மேலும், இன்றைய தேதி வரை இஷா நடித்த ஒரே ஒரு தமிழ் படமும் இதுதான். 1997-ல் மணிரத்னம் தயாரிப்பில் உருவான நேருக்கு நேர் படம்தான் சூர்யாவின் அறிமுகப்படம்.
இதனாலேயே ஆய்த எழுத்து படத்தில் நடிக்க மணிரத்னம் கேட்டதும் கதையைக் கூட கேட்காமல் உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம் சூர்யா. `குரு கூப்பிட்டால் உடனே போக வேண்டாமா?’ என்று சொல்லியிருப்பார் சூர்யா. அதேபோல், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் மற்றும் மணிரத்னம் தயாரிப்பில் டும் டும் டும், என மூன்று முறைக்குப் பிறகு நான்காவது முறையாக மாதவன் இந்தப் படம் மூலம் மணிரத்னத்துடன் இணைந்தார்.
இதையும் படிங்க: வா வா டியரு பிரதரு… கேப்டனுக்காக கோட் படக்குழுவினர் செய்த செம மேட்டரு இதான்!
ஆய்த எழுத்து படத்துக்காக திரிஷா ஸ்கிரீன் டெஸ்ட் சமயத்தில் அவருக்கு கேமராவின் பின்னால் இருந்து கவுண்டர் கொடுக்கும் வேலையை சித்தார்த் செய்தாராம். அதுவரை படத்தில் நமக்கு ஒரு கேரக்டர் இருக்கும் என்ற எண்ணமே இல்லாமல் அசிஸ்டென்ட் டைரக்டர் வேலை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் மணிரத்னம்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…