திரிஷா, சத்தியராஜ் கொரோனாவால் பாதிப்பு...திரையுலகினர் அதிர்ச்சி...

by சிவா |   ( Updated:2022-01-08 03:32:43  )
sathyaraj
X

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 750 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரு நாளில் 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.. எனவே, அரசு இதை கட்டுப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரவு நேர ஊடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒருபக்கம் பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே, கமல்ஹாசன், வடிவேலு, அர்ஜூன் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். அதன்பின் சமீபத்தில் இசையமைப்பாளர் தமன், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, நடிகை மீனா மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நடிகை திரிஷா மற்றும் சத்தியராஜ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக திரையுலகை சேர்ந்தவர்கள் நிறைய பேர்களை சந்திப்பவர்களாக இருக்கிறார்கள். படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள். எனவே, அவர்களில் அதிகம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.

Next Story