சிம்பு கொடுத்த திடீர் முத்தத்தால் கிறங்கிப்போன திரிஷா? அப்புறம் என்ன ஆனது? ருசிகர தகவல்

by sankaran v |   ( Updated:2022-04-14 03:02:26  )
சிம்பு கொடுத்த திடீர் முத்தத்தால் கிறங்கிப்போன திரிஷா? அப்புறம் என்ன ஆனது? ருசிகர தகவல்
X

trisha and simbu

திரிஷா சினிமாவில் 2000 காலகட்டத்தில் தனக்கென தனி ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தி தமிழ்த்திரையுலகில் ஒரு கலக்கு கலக்கினார். அவரைத் தெரியாதவர்கள் யாரும் தமிழ் சினிமா ரசிகர்களாக இருக்க முடியாது. அந்த அளவுக்கு பெயர் வாங்கியவர். இவர் வாழ்க்கையில் நடந்த சில சுவையான சம்பவங்களைப் பார்ப்போம்.

ஆனந்தவிகடன் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகையாக திரிஷா தேர்வானார். அப்போது அவர் இவ்வாறு கூறினார்.

விகடனுக்கு நன்றி. 1999ல பர்ஸ்ட் இன்டர்வியூ கொடுத்தேன். 2018ம் ஆண்டு தமிழ்சினிமாவில் நிறைய போட்டிகள் இருந்தன. என்னைத் தேர்வு செய்ததற்கு நன்றி. 16 வருடங்களுக்குப் பிறகு எனக்கு என்று அழகாக ஒரு திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். நன்றி.

விஜய் சேதுபதி உடன் நடித்த 96 படத்திற்குத் தான் இந்த விருது கிடைத்தது.. ஜானுவை யாராலும் மறக்க முடியாது. முழு படமே நைட் ஷ_ட்டிங். ஜாலியாக நடிச்சிட்டுப் போனோம். எனக்கு நைட் ஷ_ட் பண்றது ரொம்பவே பிடிக்கும்.

thrisha

ஸ்ரீதேவி, ராதா, சிம்ரன் ஆகியோர் தான் தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் வந்து கலக்கியவர்கள். அவர்களில் த்ரிஷாவும் ஒருவர். விண்ணைத்தாண்டி வருவாயா, 96 ஆகிய படங்களில் அவரது நடிப்பு தத்ரூபமாக இருக்கும்.

1983ல் கிருஷ்ணன் - உமா தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். ஹைதராபாத்தில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் மேனேஜராக வேலை செய்தார். அக்.2012ல் உடல்நலக்குறைவால் இறந்தார். த்ரிஷா சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் படித்தார். அப்பவே மாடலிங்கில் இன்ட்ரஸ்டாக இருந்தார்.

திரிஷாவைப் பற்றி நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் இப்படி கூறுகிறார்.

Thrisha

திரிஷாவுக்கு சினிமா ஆசை வந்தது. ஆனால் அவருக்கு சினிமாவில் உடனடியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் படத்தில் சிம்ரனுக்கு தோழியாக வந்தார். அது யாரு? ரொம்ப நல்லா பர்மார்மன்ஸ் பண்ணுதே என அனைவரும் கேட்டனர். அந்த நடிப்பே அவரை சூர்யாவுக்கு ஜோடியாக கொண்டு போய் சேர்த்தது. மௌனம் பேசியதே இந்தப்படம் தான் திரிஷாவுக்கு முதல் படம். அமீர் இயக்கிய இந்தப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இவரது இரண்டாவது படம் மனசெல்லாம். இதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சினிமாவில் ராசியில்லாத நடிகை என்று பெயர் எடுத்தார். துணிச்சலாக 3வது படத்திலும் களம் இறங்கினார். அடுத்து அதிரடியாக ஹரி இயக்கத்தில் வந்தது சாமி.

இந்தப்படத்தில் திரிஷாவை களமிறக்கியதும், சாமி படம் ஓடாவிட்டால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றார். படம் மெகா ஹிட். கவிதாலயா நிறுவனம் தயாரித்த படங்களில் அதிக வசூலை ஈட்டியது. அடுத்தது லேசா லேசா. அது சுமார் ரகம்.

அடுத்தது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அவருக்கு திட்டமிடாத நேரத்தில் யதார்த்தமாக உணர்வுகளின் அடிப்படையில் திடீர் என முத்தம் கொடுத்தார் சிம்பு. அப்போது திரிஷாவின் மனதில் இடம்பிடித்தவர் சிம்பு. பின்னர் தெலுங்கில் போய் பல படங்களில் நடித்தார். அங்கு நடிகர் ராணாவுடன் படம் நடித்தார். இருவரும் நெருங்கிப்பழகினர். அப்போது ராணாவை காதலித்தார். ஆனால் அவரோ இருவரும் நட்புடன் உள்ளோம் என்றார்.

திரிஷா ராணாவின் காதல் தோல்வியை ஏற்றுக்கொண்டார். அதன் காரணமாக திருமணம் செய்யாமல் பிடிவாதமாக இருந்தார். அவரது அம்மா பல இடங்களில் மாப்பிள்ளைப் பார்த்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அப்போது விஜய் சேதுபதியுடன் 96 என்ற படத்தில் ஜோடி சேர்ந்தார்.

Trisha and vijaysethupathi

இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வித்தியாசமாக கதைகளத்தைக் கொண்ட படம். சூப்பர்ஹிட் ஆனது. விஜய் சேதுபதிக்கு இந்தப்படத்திற்குப் பிறகு நல்ல மார்க்கெட் கிடைத்தது.

திரிஷாவுக்கும் பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு திரிஷா சம்பள விவகாரத்தில் கறாராக இருந்தார் என்றும் சர்ச்சை எழுந்தது. தன்னுடன் நடிக்கக்கூடிய நடிகர் யார் என்று பார்ப்பதில்லை. தனக்கான கேரக்டர் எப்படிப்பட்டது என்று மட்டுமே பார்த்து சம்மதித்தார். தொடர்ந்து கதையுடன் வருபவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்தார்.

Next Story